சினிமா விமர்சனம்

ஜெயிலர் விமர்சனம்

இயக்குநர்: நெல்சன் திலீப்குமார் நடிகர்கள் : ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில்,மோகன் லால், விநாயகம், ஜாக்கி ஷெராஃப் Leo Audio Launch: லியோ இசை வெளியீட்டு விழாவில் திடீர் மாற்றம். விஜய் எடுத்த அதிரடி முடிவு! இசையமைப்பாளர்: அனிருத்

ஓய்வு பெற்ற ஜெயிலரான டைகர் முத்துவேல் பாண்டியன் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார். தன் பேரனுடன் சேர்ந்து யூடியூப் வீடியோக்களை உருவாக்குவது, மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள் வாங்கி வருவது, மகன், பேரனின் ஷூவை துடைப்பது என ரிலாக்ஸாக வாழ்கிறார்.

சிலை திருட்டில் ஈடுபட்ட கும்பலை தேடிச் சென்ற முத்துவேல் பாண்டியனின் போலீஸ்கார மகன்(வசந்த் ரவி) மாயமாகிறார்.

மகன் இறந்த செய்தி வரும்போது முத்துவேல் பாண்டியனை குறை சொல்கிறார் மனைவி( ரம்யா கிருஷ்ணன்). நேர்மை நேர்மை என்று சொல்லி சொல்லி நீங்கள் வளர்த்தது தான் மகனின் உயிர் போக காரணம் என்கிறார் மனைவி.

மகனின் மரணத்திற்கு பழிவாங்க முடிவு செய்கிறார் முத்துவேல் பாண்டியன்.

படம் துவங்கி 40 நிமிடங்கள் கழித்து சூடுபிடிக்கிறது. ரஜினி படம் என்றால் அவருக்காக மாஸான அறிமுக காட்சி இருக்கும். ஆனால் ஜெயிலரில் அப்படி எதுவும் இல்லை. அங்கு தான் இது ரஜினி அல்ல நெல்சனின் படம் என்பது தெரிகிறது.

முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும் இடைவேளையும், இரண்டாம் பாதியும் அதை சரி செய்துவிடுகிறது.

முதல் பாதியில் தன் டார்க் காமெடி வித்தையை காட்டியிருக்கிறார் நெல்சன். யோகி பாபு, ரஜினிகாந்த் இடையேயான காமெடி காட்சிகள் தான் முதல் பாதியை காப்பாற்றுகிறது. இரண்டாம் பாதியில் முத்துவேல் பாண்டியனின் கடந்த காலத்தை காட்டும் போது படம் சூடுபிடிக்கிறது.

முந்தைய ரஜினி படங்களை போன்றே ஜெயிலரிலும் லாஜிக் இல்லை. நெல்சனின் டார்க் காமெடி கை கொடுத்திருக்கிறது.

மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, சுனில், கிஷோர் ஆகியோர் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம். சிவராஜ்குமார், மோகன்லால் வரும் கிளைமாக்ஸ் காட்சியை மிஸ் பண்ணிவிடாதீர்கள்.

ரஜினி வெறும் ஹீரோ இல்லை சூப்பர் ஸ்டார். படத்தில் சூப்பர் ஸ்டாராக வந்திருக்கிறார். ரஜினி வரும் இடங்களில் தியேட்டர்களில் விசில் பறக்கிறது. தந்தை, மகன் இடையேயான பாசத்தை மையமாக வைத்து படம் எடுத்திருக்கிறார் நெல்சன். ஆனால் முத்துவேல் பாண்டியனுக்கும், மகனுக்கும் இடையேயான நெருக்கத்தை காட்ட தவறிவிட்டார். நடிப்பு ராட்சசியான ரம்யா கிருஷ்ணனுக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை.

வில்லனாக மிரட்டியிருக்கிறார் விநாயகன். அனிருத்தின் பி.ஜி.எம். படத்திற்கு பெரிய பலம்.

படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து, வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்ன விட்டு போகல என்று நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் சொல்லியிருப்பார். அந்த படம் ரிலீஸாகி 24 ஆண்டுகள் கழித்தும் அந்த வசனம் ரஜினிக்கு பொருத்தமாக இருக்கிறது. ஆனால் படத்தை காப்பாற்ற அது மட்டும் போதாதே.

  • Be the first to comment

Back to top button