தமிழ் சினிமா

தமிழ் சினிமாவுல யாருக்கு வேணாலும் வில்லனா நடிப்பேன்!”- மிரட்டும் `கேங்ஸ்டர்’ துல்கர் சல்மான்

தமிழ் சினிமாவுல வில்லனா நடிச்சிருந்த எல்லா மலையாள நடிகர்களும் நல்லாப் பண்ணியிருந்தாங்க. எனக்கு ஸ்கிரிப்ட் பிடிச்சிருந்தா, நிச்சயம் தமிழில் யார் கூட வேணும்னாலும் வில்லனாக நடிப்பேன்.” – துல்கர் சல்மான்
இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட் பேப்பர்ல நிறைய டீடெய்லிங் இருக்கு. ராஜூக்கு (நாயகன்) ஒரு பேக் ஸ்டோரி இருக்கு. எனக்கு இந்த ஸ்டோரி கேட்டவுடன் என்னுடைய நார்மல் வாழ்க்கையில நான் பண்ற விஷயங்களுக்கு எதிர்மறையான விஷயங்கள் பண்ற ஒரு கேரக்டர்ல நடிச்சா எப்படி இருக்கும் அப்படின்னுதான் தோணுச்சு. அப்படித்தான் இதை மைண்ட்ல வெச்சிட்டு நடிச்சேன். படத்தோட ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி. இவங்க கூட நடிக்கிறதுக்குக் கொஞ்சம் தனியா தயாராகிட்டுதான் வந்தேன். கொஞ்சம் பயம் இருந்தது. ஏன்னா, மணிரத்னம் சார் படத்தில் நடிச்சு இருக்காங்க. அதுவும் முக்கியமான ரோலில் கார்த்தி, விக்ரம், பிரபு சார் எல்லார் கூடவும் சேர்ந்து நடிச்சிருக்காங்க. இதனால், நாம எங்கயும் கொஞ்சம் கூட சொதப்பிடக் கூடாதுன்னுதான் நடிக்கவே போனேன். ஐஸ்வர்யா, தாரா எனும் கேரக்டரில் நடிச்சிருக்காங்க. இந்த கேரக்டர் பெயர் தமிழ் நாட்டுல ரொம்ப பேமஸ். ‘ஓகே கண்மணி’ தாரா! புரோமோஷன் நேரத்தில் எல்லாரும் ‘தாரா’ கேரக்டர் பத்தி கேட்குறாங்க. ஆனா, எனக்கு ஸ்பாட்ல எங்கயும் ‘ஓகே கண்மணி’ தாரா ஞாபகத்துக்கு வரவே இல்லை. இந்த ராஜூவின் தாரா மட்டும்தான் ஞாபகத்துல இருந்தாங்க!” என்றவர் நம் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்கினார்.

Related Articles

  • Be the first to comment

Back to top button