டி.வி

படையப்பா கிளைமாக்ஸ் சீன் பார்த்த மாதிரி இருந்தது!” மாநாடு குறித்து ராஜலட்சுமி செந்தில்

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது பாடல்கள் மூலம் மக்களை என்டர்டெயின் செய்த கலைஞர்களுள் மக்களிசை பாடகர்களான செந்தில் கணேஷ் – ராஜலட்சுமியும் ஒருவர். அவர்களுடைய கச்சேரி வெகுவாக பேசப்பட்ட நிலையில் ராஜலட்சுமியை தொடர்பு கொண்டு மாநாடு குறித்துப் பேசினோம்.
எங்களுக்கு ரொம்ப வருஷமாகவே விஜயபாஸ்கர் சாரைத் தெரியும். அவர் எங்க மாவட்டம். சூப்பர் சிங்கர் டைட்டில் ஜெயிச்சப்ப கூட நம்மூர் பசங்க வெளியில போய் ஜெயிச்சிட்டு வந்திருக்கீங்கன்னு சொல்லி எங்களுக்காக பாராட்டு விழாவெல்லாம் எடுத்து எங்களை கெளரவப்படுத்தினார். அப்போதிலிருந்தே அவர் கூட நட்போட தான் இருக்கிறோம். அந்த சமயம் அவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அவ்ளோ பெரிய கூட்டத்தை நம்ம பாட்டு மூலமா சந்தோஷப்படுத்தப் போறோம்னு எங்களுக்கு உற்சாகமா இருந்தது. சீக்கிரம் முடிக்க சொல்லிட்டாங்களே என்கிற ஒரே ஒரு வருத்தம் தான் இருந்துச்சு. மத்தபடி அவ்ளோ பெரிய கூட்டத்துக்கு முன்னாடி பர்ஃபார்ம் பண்ணினது ரொம்ப பெரிய அனுபவத்தைக் கொடுத்துச்சு!” என்றவரிடம் திண்டுக்கல்லு திண்டுக்கல்லு’ பாடல் பாடும்போது திண்டுக்கல் சீனிவாசன் அந்தப் பாடலை என்ஜாய் பண்ணின வீடியோ சமூகவலைதள பக்கங்களில் வைரலாச்சே.. அதைப் பார்த்தீங்களா?’னு கேட்டோம்.

நான் இன்னும் அந்த வீடியோ பார்க்கல. ஆனா, கேள்விப்பட்டேன். அவங்க எல்லாரும் மேடையில் இருந்து ரொம்ப தூரமா உட்கார்ந்திருந்தாங்க. நான் சின்னப்புள்ளையா இருந்தப்பவே திண்டுக்கல் சீனிவாசன் ஐயாவைத் தெரியும். நம்ம வீட்டுப் பொண்ணுன்னு தான் என்னை அவர் ட்ரீட் பண்ணுவார். இந்தப் பாட்டை பாடுறதுக்கு முன்னாடி என் ஊர்னு சொல்லியும், சீனிவாசன் ஐயாவை சொல்லியும் லீடு கொடுத்துட்டு தான் பாடினேன். ஐயா அந்தப் பாட்டை என்ஜாய் பண்ணி ரசிச்சிருக்காங்கங்கிறது உண்மையாவே சந்தோஷமா இருக்கு. அது செம வைப் ஆன பாட்டு!” என்றவர் தொடர்ந்து பேசினார்.

  • Be the first to comment

Back to top button