பாலிவுட்

புதிய படமா? ஜவானுக்கு விளம்பரமா? புதிய கெட்டப்பில் நடிகர் சல்மான் கான்!

சல்மான் கான் நேற்று இரவு மும்பையில் உள்ள ரெஸ்டான்ட்டுக்கு வந்தார். எப்போதும் இல்லாத விதமாக சல்மான் கான் புதிய தோற்றத்துடன் காட்சியளித்தார். அதாவது மொட்டை தலையுடன் வந்திருந்தார். திடீரென மொட்டை தலையுடன் வந்திருப்பதை பார்த்த புகைப்பட கலைஞர்கள் சல்மான் கானின் போட்டோவை எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டனர். அப்புகைப்படம் வைரலாகி இருக்கிறது. சோசியல் மீடியாவில் மொட்டை தலையுடன் சல்மான் கான் புகைப்படத்தை பார்த்த பலரும், இது புதிய படத்திற்கான தோற்றமா என்று சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு முன்பு சல்மான் கான் இதே தோற்றத்தில் நடித்த தேரா நாம் என்ற படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதனை சல்மான் கான் திரும்ப எடுக்கப்போகிறாரா என்று சிலர் கமென்ட்டில் பதிவிட்டனர். சிலர் ஷாருக்கானின் ஜவான் படத்தை விளம்பரப்படுத்த கிளம்பி விட்டாரா என்று கேள்வி எழுப்பிவிட்டனர். மற்றொருவர் விஷ்னுவரதன், கரன் ஜோகரின் புதிய படத்திற்கான ஒத்திகை என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

`தேரா நாம்’ படத்தில் மொட்டை தலையுடன் நடித்த அனுபவம் குறித்து சல்மான் கான் ஒருமுறை அளித்திருந்த பேட்டியில், ”நான் வேறு ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அந்நேரம் எனது நண்பரும், தயாரிப்பாளருமான சுனில் மச்சேந்திரா என்னிடம் வந்து எனது படத்தில் நடிக்க நீ தலையை மொட்டையடித்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். நான் வேறு ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். நான் காய்ச்சல் வந்து வீட்டில் படுத்திருந்தேன்.

அந்நேரம் வேறு படத்தின் இயக்குனர் படப்பிடிப்புக்கு வருமாறு கூறிக்கொண்டே இருந்தார். இதனால் கோபத்தில் பாத்ரூம் சென்று எனது தலையை மொட்டையடித்துக்கொண்டேன். மறுநாள் சுனில் மச்சேந்திராவிடம் சென்று தேரா நாம் படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக கூறினேன் என்று தெரிவித்திருந்தார்.

Related Articles

  • Be the first to comment

Back to top button