கிசு கிசு

Actor: ஸ்ட்ரிக்ட் இயக்குநரிடம் சிக்கித் தவிக்கும் வாரிசு நடிகர்!

அடி உதை என களைக்கட்டும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல இயக்குநரிடம் சிக்கி கொண்டு தவித்து வருகிறாராம் அந்த வாரிசு நடிகர்.

ஸ்ட்ரிக்ட் இயக்குநர்

ஸ்ட்ரிக்ட் இயக்குநர்

முதல் படத்திலேயே விருதுகளை குவித்தவர் அந்த ஸ்ட்ரிக்ட் இயக்குநர். படப்பிடிப்பில் சொன்னதை செய்யா விட்டால் யார் என்னவென்றெல்லாம் பார்க்க மாட்டார். கோபத்தில் இயக்குநரின் கை கூட பேசும் . விருது இயக்குநர், அவரது படத்தில் நடித்தால் பெயருக்கும் புகழுக்கும் கேரண்டி என பல நடிகர் நடிகைகள் அவரது படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அப்செட்

அப்செட்

அதேநேரத்தில் பெரிய நடிகர்கள் அவருக்கிட்டலாம் வேலை பார்ப்பது கஷ்டம் என ஓரங்கட்டி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ஸ்ட்ரிக்ட் இயக்குநர் இயக்கத்தில் பெரிதாக படங்கள் வெளியாகவில்லை. போதா குறைக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பின்னடைவால் அப்செட்டில் இருந்தார் இயக்குநர்.
 Ponniyin Selvan 2: நான் மணிரத்னத்தின் குந்தவை.. கல்கிக்கு நன்றி.. பெருமையுடன் சொன்ன த்ரிஷா!

வாரிசு நடிகர்

வாரிசு நடிகர்

இதனைப் பார்த்த அவரால் வளர்ந்த பிரபல வாரிசு நடிகர் அவருக்கு தனது தயாரிப்பிலேயே வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அவரிடமும் வேலையை காட்டினாராம் இயக்குநர். இதனால் அந்த வாரிசு பாதியிலேயே கழண்டு கொள்ள, மற்றொரு வாரிசு நடிகரை கமிட் செய்த இயக்குநர் அவரை வச்சு செய்து வருகிறாராம்.
 Mammooty mother death: நடிகர் மம்மூட்டியின் தாயார் மரணம்… திரையுலகினர் இரங்கல்!

முடித்தால் போதும்

முடித்தால் போதும்

பெயர் பெற்ற இயக்குநர், இவரது படத்தில் நடித்தால் தனது கெரியர் ஸ்ட்ராங் ஆகும் என்று எண்ணிய அந்த வாரிசு நடிகர் பல்லைக் கடித்துக் கொண்டு சமாளித்து வருகிறாராம். எப்படியாவது இந்த புராஜெக்ட்டை முடித்துவிட்டு கரை சேர்ந்தால் போதும் என நட்பு வட்டத்திடம் புலம்பி வருகிறாராம் வாரிசு நடிகர்.

Related Articles

  • Be the first to comment

Back to top button