தமிழ் சினிமா

விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ நவம்பர் 24 ரிலீஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’. கடந்த சில ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கும் இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உட்படப் பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் படக்குழு நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், இப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஒரு பிரத்யேக வீடியோவையும் வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் 24ஆம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்டது. இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இதுவரை இரண்டு பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்திலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. கதையில் மாற்றம் செய்திருப்பதால் அவர் தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. எனினும் படக்குழுவோ, ஐஸ்வர்யா ராஜேஷோ இது தொடர்பாக வாய்திறக்கவில்லை.

Related Articles

  • Be the first to comment

Back to top button