தமிழ் சினிமா

150 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த “ரவுடி பேபி” பாடல்..!!

சென்னை: யூடியூப் தளத்தில் 150 கோடி பார்வைகளைக் கடந்த முதல் தென்னிந்திய திரைப் பாடல் என்ற சாதனையை ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் படைத்துள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாரி 2’. தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதில் யுவன் இசையில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. 2019-ஆம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட இப்பாடல் யூடியூபில் அந்த ஆண்டில் அதிகம் பேர் பார்த்த இந்திய வீடியோக்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

இந்த நிலையில், ‘ரவுடி பேபி’ பாடல் தற்போது யூடியூபில் 150 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 150 கோடி பார்வைகளை (1.5 பில்லியன்) கடந்த முதல் தென்னிந்தியப் பாடல் என்ற பெருமையையும் ‘ரவுடி பேபி’ பாடல் தக்கவைத்துள்ளது. இது தொடர்பாக யுவன் ஷங்கர் ராஜா, தனுஷ், சாய் பல்லவி ஆகியோரை டேக் செய்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

  • Be the first to comment

Back to top button