ஹாலிவுட்

K rajan vs Mansoor ali khan: “சாக்கடை.. சாணி.. இது யாருக்கும் பயன்படாத பன்னாடை! ” – பொளந்து கட்டிய ராஜன்

விழாவில், மன்சூர் அலிகான் கே.ராஜனுக்கு போர்வை போட்டு வரவேற்க, அதை வாங்கி அவருக்கே போர்த்திய கே.ராஜன் இந்த மாதியான ராஜஸ்தான் சால்வைகளை விடுத்து, தமிழ்நாட்டில் கிடைக்கக்கூடிய சால்வைகளை வாங்கி போடுங்கள் என்றார்.

அதற்கு மன்சூர் அவை மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. யாருமே வேலைக்கு வருவதில்லை என்றார்.

அதனைத்தொடர்ந்து பேசிய ராஜன், இந்த பொன்னாடை பயன்படாத பன்னாடை. எப்போதுமே மன்சூர் ரிஸ்க் எடுப்பார். இப்போது உள்ள இளைஞர்கள் இந்தப்படத்தின் ட்ரெய்லரை பார்த்தால் நிச்சயம் திருந்துவார்கள்.

சாக்கடை, சாணி என எல்லாவற்றிலும் இப்போதைய இளைஞர்கள் குடித்து விழுந்து கிடக்கிறார்கள். குடும்பத்தை கெடுத்து, தாய்மார்களை அடித்து என இந்தக்குடியால் நாடு மோசமாகி விட்டது. கல்லூரி மாணவிகள், ஐடி பெண்கள் ஆகியோர் குடிக்கிறார்கள்.

தங்கமான தங்கச்சி படம் எடுத்தேன். அதில்தான் முதன்முறையாக சரத்குமார் அறிமுகமானார். எல்லோரும் சூரியன் திரைப்படம் அவருக்கு முதல் என்று சொல்வார்கள். வெற்றி பெற்ற படத்தைத்தானே இங்கே முன்நிறுத்துவார்கள். அந்தப்படத்தில் மன்சூரை வில்லனாக போட்டேன் .

காட்சி ஒன்றில் சரத்குமாரை கட்டி தொங்கவிட்டு இருப்பார்கள். அவரை மன்சூர் குத்த வேண்டும். சரத் அப்போதுதான் ஆபரேஷன் முடித்து, 6 மாதங்கள் இருக்கும். ஒரே குத்தாக மன்சூர் குத்த, சரத் ஒரு 2 மணி நேரம் துடிதுடித்து போய்விட்டார்.” என்று பேசினார்.

Related Articles

  • Be the first to comment

Back to top button