தமிழ் சினிமா

அந்த படத்தில் கவர்ச்சி நடனமாடிய நடிகை…. தற்போது வைரலான வீடியோ… வருத்தத்தில் தேவயானி..?

1990 களில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர்  தேவயானி… எல்லா ஹீரோவுக்கும் பொருந்தும் நடிகையாக அழகாக பவ்வியமாக ரசிகர்களின் மனதை  கவர்ந்தவர் . க்யூட்டான பேச்சில் அனைவரையும் கவர்ந்து இழுத்த நடிகை தேவயானி..  தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்..

குடும்பபங்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததால் ரசிகர்கள் தங்கள் வீட்டு பெண்ணாகவே நினைத்தனர்.தமிழில் முதன் முதலில் தேவயானி ‘தொட்டாச்சிணுங்கி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். முதல் படத்திலேயே இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்..

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் குடும்ப கதையில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தவர்தான் தேவயானி. அதன் பிறகு வாய்ப்புகள் குறைந்ததால் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார்.அதன்பிறகு கல்லூரி வாசல் படத்தில் இன்னும் படுகவர்ச்சியாக நடித்திருப்பார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சிவசக்தி படத்தில் பிரபு மற்றும் சத்யராஜ் நடித்துள்ளனர்.

இப்படத்தில் சத்யராஜ் உடன் தேவயானி ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருப்பார். இது பலருக்கும் தெரியாது. ஆனால் சினிமாவை பொருத்தவரை பல நடிகைகள் படுகவர்ச்சியாக நடித்துள்ளனர். அதுபோலதான் தேவயானியும் ஒரு சில படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

ஆனால் காதல் கோட்டை படம் வெளி வந்த பிறகு தேவயானி சினிமா வாழ்க்கை அப்படியே மாறியது. அதன் பிறகு பல ஹிட் படங்களை கொடுத்தார் .சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போதே 2001 ஆம் ஆண்டு ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிப்பில் இருந்து விலகி விட்டார்.தற்போது கூட ஒரு சில சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் நடித்து வருகிறார்..

Related Articles

  • Be the first to comment

Back to top button