தமிழ் சினிமா

நீண்ட நாள் ஆசை… இயக்குனர் அவதாரம் எடுத்த ஜெயம் ரவி… ஹீரோ யார் தெரியுமா..?

எனது நீண்ட நாள் கனவு நிறைவேறப்போகிறது… திடீர் இயக்குனர் அவதாரம் எடுத்த ஜெயம் ரவி… எனக்கு படம் இயக்கும் ஆசை உள்ளது. அப்படி படம் இயக்கும்போது, நான் இயக்க வேண்டும் என்று நினைக்கும் முதல் ஹீரோ விஜய் சேதுபதி தான்… எனக்கு சீக்கிரம் கால்ஷீட் கொடுங்க..

1989ம் ஆண்டு “ஒரு தொட்டில் சபதம்” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் ஜெயம் ரவி…

பின்னர் 2003ம் ஆண்டு ஜெயம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து எம்.குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி, தாஸ், மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி என பல வெற்றிபடங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” இரண்டு பாகங்களிலும் ரவியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் “இறைவன்”.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய ஜெயம் ரவி, ” இறைவன் என்றாலே அன்பு தான். இதுவரை இந்த தலைப்பை யாரும் வைக்கவில்லை என்பதே எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

எனக்கு படம் இயக்கும் ஆசை உள்ளது. அப்படி படம் இயக்கும்போது, நான் இயக்க வேண்டும் என்று நினைக்கும் முதல் ஹீரோ விஜய் சேதுபதி தான். அவர் எனக்கு சீக்கிரம் கால்ஷீட் கொடுக்க வேண்டும்” என்று மேடையில் கூறினார். இந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அன்பை கொடுக்கும் இறைவனை ஏன் தலைப்பாக வைக்கவில்லை என்று தோன்றியது. இந்த அன்பில்தான் படம் தொடங்கியது.

படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்…

Related Articles

  • Be the first to comment

Back to top button