தமிழ் சினிமா

சந்திரமுகி 2 படத்தில் காணாமல் போன 480 ஷாட்கள்….. பி.வாசு சொன்ன ஷாக் தகவல்.!!

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்..

2005ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர்.

மிகப்பெரிய வசூலை அள்ளிய இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் செப்டம்பர் 28ந் தேதி வெளியாக உள்ளது.

ராகவா லாரன்ஸ்: சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினிகாந்த் வேட்டையன் ராஜாவாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடித்துள்ளார். இந்த படத்தில் லாரன்ஸ் கமிட் ஆன போதே ரஜினியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.

தள்ளிப்போனது: சந்திரமுகி 2 படத்தின் வேலைகள் ஓராண்டிற்கும் மேலாக நடைப்பெற்று வந்தது. படத்தில் சிஜி எஃபெக்ட்ஸ் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அப்போது படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் சிஜி எஃபெக்ட்ஸ் பணிகள் முடிவடையாததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு செப்டம்பர் 28ந் தேதி படம் வெளியாக உள்ளது.

டிரைலர் 2 சுமார் தான்: இதையடுத்து, சந்திரமுகி 2 படத்தின் 2வது டிரைலரை படக்குழு வெளியிட்டது. அதில்,17 வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டு பொண்ணு கங்கா, தன்னைத் தானே சந்திரமுகியா நெனைச்சுட்டு அந்த ஆட்டம் ஆடுச்சு. இப்போ ஒரிஜினல் பீஸே வந்து இறங்கியிருக்கு. என்ன ஆட்டம் ஆடப்போகுதோ… என்ற வடிவேலு வசனத்துடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. பேய் பங்களா செட் அப் தொடர்ந்து வரும் வடிவேலுவின் சிரிக்க வைக்காத காமெடி, வேட்டையன்’ இன்ட்ரோ, சண்டைக் காட்சி, திகிலுக்கான முயற்சி என பார்த்துப் பழகிய காட்சிகள் தான் இடம்பெற்று இருந்தன.

480 காட்சியை காணவில்லை: இந்நிலையில், சந்திமுகி2 படத்தின் வெளியீட்டு தேதி செப்டம்பர்15ல் இருந்து 28ம் தேதிக்கு தள்ளிப்போனதற்கான காரணம் குறித்து பி.வாசு வெளிப்படையாக பேசி உள்ளார். அதில் படத்தின் ஃபைனல் காப்பியை பார்த்தேன், அப்போது, அதில் இருந்த 480 ஷாட்கள் காணவில்லை, கிட்டத்தட்ட 5 நாட்கள் தீவிரமாக தேடி பின் அந்த காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதான் காரணம் என பி.வாசு சொன்னார். சந்திரமுகி 2 படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாமால் போனாலும் கண்டிப்பாக புது பொலிவுடன் செப். 28ம் தேதி ரிலீசாகும் எனவும் பி.வாசு தெரிவித்தார்..

Related Articles

  • Be the first to comment

Back to top button