தமிழ் சினிமா

தல அஜித்தின் விடாமுயற்சி தொடங்கியாச்சு… வெளியானது ருசிகர அப்டேட்..!!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் அறிவிப்பு வந்து சில மாதங்களானது. ஆனால், படப்பிடிப்பை உடனடியாக ஆரம்பிக்காமல் இருந்தனர். அதற்குள் அஜித்தும் பைக்கில் உலக சுற்றுப் பயணம் போக ஆரம்பித்தார்…

நடிகர் அஜித் தன்னுடைய வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நான்கு நாட்களுக்கு முன்பு சென்னை வந்தடைந்தார்.

தமிழ் சினிமாவில் அதிகளவில் ரசிகர்களை கொண்ட முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் துணிவு படம் ரிலீசானது. மீகாமன், தடையறத் தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி அடுத்து இயக்க உள்ள படம் விடாமுயற்சி. துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வலிமை, துணிவு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நிரவ் ஷா இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். விடாமுயற்சி படம் ஏற்கெனவே பல பஞ்சாயத்துகளைக் கடந்து விக்னேஷ் சிவனை தாண்டி, மகிழ் திருமேனி கைகளுக்கு வந்துள்ள நிலையில், டைட்டில் அறிவிப்புக்குப் பிறகு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வேறு எதுவும் வராதது அஜித் ரசிகர்களை கவலையடைய வைத்தது.

மேலும் கடந்த சில நாள்களாக “விடாமுயற்சி ட்ராப் ஆகிவிட்டது போல..” எனும் அளவுக்கு கோலிவுட் வட்டாரத்தில் இருந்து பரபரப்பான தகவல்கள் கிளம்பிய சூழல், நார்வே, துபாய் எனப் பயணித்து தன் சுற்றுப் பயணங்களை முடித்துக் கொண்டு நடிகர் அஜித் மீண்டும் சென்னை திரும்பியது அவரது ரசிகர்களை சற்றே ஆசுவாசப்படுத்தியது. அவ்வப்பபோது, அஜித் பைக்கில் சுற்றுலா செல்லும் வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதேநேரம் விடா முயற்சி அப்டேட் கேட்டு ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், விடாமுயற்சிக்கான அப்டேட் வந்துள்ளது. அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங்களில் இணைய உள்ளார். அபுதாபி, துபாய், சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி அபுதாபியில் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அபுதாபியில் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, சென்னை திரும்பும் படக்குழு, இரண்டாவது கட்ட சூட்டிங்கை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் ஷூட்டிங் 5 மாதங்கள் தள்ளிபோன நிலையில், தற்போது படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி இந்த படத்தின் சூட்டிங்கில் எடிட்டரையும் உடன் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டில் திட்டமிட்டுள்ள நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங்கை சிறப்பாக நிறைவு செய்ய மகிழ்திருமேனி களத்தில் குதித்துள்ளார்.. இனி முழு வீச்சில் தல படம் சூட்டிங் நடக்க போகிறது..

Related Articles

  • Be the first to comment

Back to top button