தமிழ் சினிமா

தல vs தளபதி!! மீண்டும் நேரடியாக மோதும் விஜய் – அஜித் படம்… எது வெல்லும்..?

அஜித் – விஜய் இருவரும் தமிழ்நாட்டின் இரண்டு உச்ச ‘மாஸ்’ நடிகர்கள். இருவரையும் ஏதோ ஒரு வகையில் வழக்கத்திற்கும் மாறான தோற்றம், உடல்மொழியின் மூலம் திரையில் ஜொலிக்கின்றனர்.. 

ரஜினிகாந்த் மற்றும் கமலுக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவருமே தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர். குறிப்பாக இருவருமே பாக்ஸ் ஆபீஸ் வசூல் மன்னனாக இருப்பதால், இவர்கள் இருவரின் படங்களுக்கு அதிகளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர். – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய் என்றுதான் தற்போது வரை கோலிவுட்டில் சொல்லப்படாத ஒரு பார்முலா சுற்றி வருகிறது. 

படத்துக்குப் பிறகு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் பூஜை சென்னையில் பிரம்மாண்டமாக அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நாளில் அஸர்பைஜான் என்ற நாட்டில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கும் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்காக அஜித் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு அவர்கள் தயார் நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. எது எப்படியோ தல vs தளபதி படங்களில்  எது முதலில் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்களுக்கு கொண்டாட்டாட்டம் தான்..

Related Articles

  • Be the first to comment

Back to top button