தமிழ் சினிமா

சந்திரமுகி 2!! ராகவா லாரன்ஸை விட அதிக சம்பளம் வாங்கிய கங்கனா ரனாவத்..!!

சந்திரமுகி 2 படம் நாளை  28 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

. இப்படத்தில் நடித்து இருக்கும் நடிகர்கள், நடிகைகளின் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன் படி, கங்கனா ரனாவத் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். மேலும் ராகவா லாரன்ஸ் ரூ 15 கோடியும், வடிவேலு ரூ 2 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளனர்.

ஸ்ருஷ்டி டாங்கேக்கு ரூ. 30 லட்சமும், லட்சுமி மேனனுக்கு ரூ. 25 லட்சமும் பெற்று இருக்கிறார்கள். ராதிகா சரத்குமாருக்கு ரூ.35 லட்சமும், மிதுன் ஷியாமுக்கு ரூ.25 லட்சமும், ராவ் ரமேஷ் வீட்டிற்கு 50 லட்சத்தையும், சுரேஷ் மேனனுக்கு 30 லட்சத்தையும் கொடுத்து இருக்கிறார்கள்.

இப்படத்தை பி வாசு எழுதி இயக்கியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் பேனரில் சுபாஸ்கரன் அல்லிராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். படத்தின் பின்னணி இசை மற்றும் இசையை எம்.எம்.கீரவாணி அமைத்து உள்ளார்.பொதுவாக கதாநாயகர்களே அதிக சம்பளம் வாங்குவார்கள் ஆனால் சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் விட கங்கனா ரனாவத் அதிக சம்பளம் பெற்று உள்ளனர்…

Related Articles

  • Be the first to comment

Back to top button