சினிமா விமர்சனம்

ஜெயம் ரவி நடித்த இறைவன் எப்படி இருக்கு… ரசிகர்களின் மனதை கவர்ந்தா..?

இன்று இறைவன் திரைப்படம் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்…

வாங்க நாமும் பார்க்கலாம்…. 

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக சைக்கோ திரில்லர் படங்கள் உருவாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில்தான் ஜெயம்ரவி நடிப்பில் இறைவன் படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படமும் ஒரு பக்கா சைக்கோ திரில்லராக வெளிவந்துள்ளது.

கதாநாயகனாக ஜெயம் ரவி  நடித்துள்ள படம் இறைவன்.. இப்படத்தில், நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தனி ஒருவன் படத்துக்குப் பிறகு இவர்கள் இருவரும் இப்படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர். அகமத் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இப்படத்தில் சைக்கோ கொலைகாரனாக ஹிந்தி நடிகர் ரகுல் போஸ் நடித்துள்ளார். இப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இப்படத்திற்கு தணிக்கை குழுவால் ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று திரையரங்கில் இறைவன் படம் ரிலீஸாகியிருக்கிறது. இந்த படத்தை காண பலரும் தியேட்டர்களுக்கு சென்றிருக்கிறார்கள். இறைவன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அது பற்றி ட்விட்டரில் கூறியிருப்பதாவது என்று பார்ப்போம்:

இறைவன் ” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் படத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர். அருமையான இயக்குனர் , படம் சூப்பர், நீண்டநாளைக்கு பிறகு எதிர்பார்ப்போடு வந்த எங்களுக்கு செம சூப்பர் படம் , நடிகர்கள் நடிப்பு அருமை என பலவாறான விமர்சனங்களை இறைவன் திரைப்படம் பெற்றிருக்கிறது.  

  • Be the first to comment

Back to top button