தமிழ் சினிமா

ரசிகர்களின் மனதில் ஜொலிக்கும் நடிகருக்கு இன்று பிறந்தநாள்… Happy Birthday சசிகுமார்..!!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற சகலகலா வல்லவன்  சசிகுமார் இன்று (செப்டம்பர் 28) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்…

மதுரை மண்ணின் சொந்தக்காரரான சசிகுமார் இயக்குநர் பாலாவின் ‘சேது’, அமீரின் ‘மெளனம் பேசியதே’, ‘ராம்’ ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

2008 ஆம் ஆண்டு வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே பெருமை தேடித்தந்த ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகராக என ஒரே நேரத்தில் மூன்று அவதாரம் எடுத்தவர்.

1980-களின் மதுரையை அப்படியே திரையில் மெய்பித்து காட்டி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். அதோடு அரசியல் அதிகாரப் போட்டி, நட்பு, காதல், குடும்ப கெளரவம், வன்மம், துரோகம் ஆகியவற்றை வைத்து மனதை பதைபதைக்கச் செய்யும் கதையைக் கூறி ஸ்கோர் செய்திருந்தார்.

அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த ‘பசங்க’ சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதையும் சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருதையும் வென்றது. அதே ஆண்டில் சசிகுமார் தயாரித்த மற்றொரு படம் வெளியாகியது. அதுதான் ‘நாடோடிகள்’. சமுத்திரக்கனி இயக்கிய இந்தப் படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்திருந்தார். தொடர்ந்து சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்க ‘ஈசன்’ என்னும் திரைப்படத்தை இயக்கினார் சசிகுமார்.

நாடோடிகள்’ வெற்றிக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘போராளி’ படத்தில் மீண்டும் நடித்தார் சசிகுமார். அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனின் ‘சுந்தரபாண்டியன்’ படத்தைத் தயாரித்து அதில் நாயகனாகவும் நடித்தார். 2016-ல் பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தில் நடித்தார் சசிகுமார். இது இசைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது படமாகும். பாலாவின் பி ஸ்டுடியோஸ், சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தன.

குடும்பம், காதல், சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்‌ஷன், பாசம், அரசியல், சமூக பிரச்னை என அனைத்துக்கும் பொருத்தமான நடிப்பை வழங்கிய திறமை பெற்றவர் இயக்குநர், நடிகர் சசிகுமார் இன்னும் பல வெற்றிகளை குவித்து இன்னும் பெரிய சாதனைகளை நிகழ்த்த அவருடைய பிறந்தாளில்  நாமும் மனதார வாழ்த்துவோம். 

சுப்பிரமணியபுரம் படம் துவங்கி அயோத்தி படம் வரை நடிகர் சசிகுமாரின் பேக் டூ பேக் கொடுத்த நடிகர் சசிக்குமார் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Related Articles

  • Be the first to comment

Back to top button