கிசு கிசு

நடிகர் சிம்புவுக்கு திருமணம்…ஓ!! மணப்பெண் இவர் தானா..?

சிம்புவை பற்றி அதுவும் அவரது திருமணம் குறித்து நிறைய வதந்திகள் வந்துவிட்டன. தற்போதும் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் அதிகம் உலா வருகிறது.

நடிகர் சிம்புவுக்கு 40 வயதாகியும் திருமணமாகாத நிலை அவரது பெற்றோர் பெரும் கவலையில் உள்ளனர். சிம்பு தனது இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.

கிட்டத்தட்ட முப்பது கிலோ எடையை குறைத்துவிட்டு ரீ-என்ட்ரி கொடுத்தார், மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். சமீபத்தில் இவர் நடித்த பத்து தல படம் ரசிகர்களிடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையே பல பிரச்னைகள், சர்ச்சைகள் வந்து கொண்டிருந்த நேரத்தில் சிம்புவின் பெற்றோர் ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் சிம்புவுக்கு திருமணத்திற்காக வரன் தேடி வருகிறார்கள்.

உடல்நலக்குறைவால் அமெரிக்கா சென்ற சிம்புவின் தந்தை ராஜேந்தர் கூட விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் வருத்தம் தெரிவித்தார். சிம்புவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த கவலைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது என்றார்.

இந்நிலையில் ஒருவழியாக சிம்புவிற்கு பெண் பார்க்கப்பட்டு உள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், சினிமா ஃபைனான்சியருமான ஒருவரின் மகளை சிம்பு திருமணம் செய்து கொள்ள போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து ஜனவரியில் திருமணம் நடைபெற இருக்கிறதாம்.எப்படியோ ஒரு வழியாக நடிகர் சிம்பு திருமணத்திற்கு சம்மதித்து விட்டார். அவரது பெற்றோர்கள், திரை துறையினர் , ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்..

Related Articles

  • Be the first to comment

Back to top button