“பூவ பூவ பூவே” பாடலுக்கு ஆட்டம்… ஜோதிகா கூட இப்படி ஆட்டம் போட்டது இல்லடா…இன்ஸ்டாமில் செம வைரல்..!!
இன்ஸ்டாகிராமில் நடிகை ஜோதிகாவின் பாடல் ரீ- கிரியேட் செய்யப்பட்ட வீடியோ வைரலாகி இதனைப் பார்த்த ரசிகர்கள் செமையாக ஒட்டியுள்ளனர் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஜோதிகா. நடிகை நக்மாவின் தங்கை என்ற அடையாளத்தோடு அறிமுகமான அவர், இன்றைக்கும் பெரிய அளவில் நடிக்காவிட்டாலும் முன்னணி நடிகையாகவே கொண்டாடப்படுகிறார். தன்னுடன் 6 படங்களில் ஜோடியாக நடித்த சூர்யாவை ஜோதிகா காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதியினர் தமிழ் சினிமாவின் ரசிகர்களால் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக திகழ்கின்றனர்.
2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் கிட்டதட்ட 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரீ கொடுத்த ஜோதிகா, அதன் பின்னர் கதையின் நாயகியாக பல படங்களில் நடித்து விட்டார். இப்படியான நிலையில் அவரின் பாடல் ரீ- கிரியேட் செய்யப்பட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. 1999 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளியான “பூவெல்லாம் கேட்டுப்பார்” என்ற படம் வெளியானது. இதில் தான் சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த முதல் படமாகும். இந்த பாடலில் ஜோதிகா கூட இப்படி ஆட்டம் போட்டது இல்லையாம் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்கிறார்கள்..
Be the first to comment