கிசு கிசுதமிழ் சினிமா

விஜய்-லோகேஷ் உச்சகட்ட மோதல்… லியோ ஆடியோ லான்ச் என்ன ஆச்சு..!!

ஒட்டு மொத்த ரசிகர்களின் பார்வையும் நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது. அடுத்த மாதம் 19ம் தேதி இந்தத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், புரமோஷன் வேலைகள் பரபரக்க தொடங்கி இருக்கின்றன. முன்னதாக படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றன.

விஜய் படங்களின் ஆகப்பெரும் புரமோஷனாக அவர் படங்களின் இசை வெளியீட்டு விழாவும், அதில் அவர் பேசும் குட்டிக்கதையும் தான் செம ஹைலெட்…

 விஜய் மற்றும் லோகேஷ் இடையே இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை.

இப்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி தடைப்பட்டது தான். அதாவது நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் திடீரென தயாரிப்பு நிறுவனம் சார்பில் லியோ இசை வெளியீட்டு விழா நடக்காது என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இதற்கு அரசியல் பின்புலம் என பல காரணங்கள் சொன்னாலும் இப்போது அதிர்ச்சி தரும் திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது லோகேஷ் மற்றும் விஜய் மோதலால் தான் இப்போது லியோ ஆடியோ லான்ச் நடக்கவில்லை என கூறப்படுகிறது. லியோ படத்தின் படப்பிடிப்பில் விஜய் மற்றும் லோகேஷ் இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது.

லோகேஷின் இமேஜை சோதிக்கும் படியாக சில விஷயங்கள் அங்கு நடந்துள்ளதால் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அதன் பிறகு அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் லியோ ஆடியோ லான்ச் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள விருப்பமில்லை என கூறிவிட்டார்.

லியோ பட குழு தரப்பில் இருந்த அவரை எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சித்த போதும் அவர் பிடி கொடுக்க வில்லையாம். தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்துள்ளார் லோகேஷ். இந்த சமயத்தில் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் லோகேஷ் கலந்து கொள்ளவில்லை என்றால் லியோ படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரக்கூடும்.

அதுமட்டுமில்லாமல் இதுவே படத்திற்கான வசூலை குறைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் லியோ இசை வெளியீட்டுக்கான ஏற்பாடு ஆரம்பிக்கப்பட்டு, பத்தாயிரத்திற்கும் அதிகமான பாஸ்களை அச்சடிக்கப்பட்டும் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் இப்போது இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதும் படத்திற்கு எதிராகத்தான் அமைந்திருக்கிறது.

அதேபோல் இப்போதும் லியோ பட பிரமோஷனுக்காக விஜய் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது .

ஆனால் பட குழுவினர் சொல்லும் காரணம் இது தான். பாதுகாப்பு நலன் கருது இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இந்த முடிவுகளுக்கு பின்னால் அரசியல் அழுத்தம் உள்ளிட்ட வேறு எந்த காரணங்களும் இல்லை என தயாரிப்பு நிறுவனம் சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

  • Be the first to comment

Back to top button