கிசு கிசு

ஐய்யய்யோ… சினிமாவா…வேண்டவே வேண்டாம்… ஓட்டம் பிடித்த நடிகைகள்… பட்டியலிட்ட பயில்வான்..!!

சினிமாவே வேண்டாம்’ என ஓட்டம் பிடித்த நடிகைகள் பற்றியும், அதற்கான காரணம் பற்றியும் பயில்வான் ரங்கநாதன் சில காலங்களுக்கு முன் பேசியது வைரல் ஆகி வருகிறது…

தமிழில் அறிமுகமாகி பின் கொடிகட்டி பறந்த நடிகைகளும் முதல் படத்திலே  சினிமாவா வேண்டவே வேண்டாம் என ஓடிய நடிகைகளும் இருக்கிறார்கள் 

சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள் பற்றி பார்ப்போமா …

‘நடிகைகள் சினிமாவை விட்டு விலகிய ரகசிய காரணங்களை நான் பேசப்போகிறேன். சினிமா, மிகப்பெரிய பொழுதுபோக்கு சாதனம். சாதாரண, முக வசியம் இல்லாத பெண் கூட, சினிமாவில் நடித்தால், அவர் பிரபலம்.

மேக்கப்பில் அவ்வளவு பில்டப் செய்துவிடுவார்கள். நடிகைகளுக்கு அவ்வளவு மவுசு. அதற்கான தான் நடிகைகளை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள். காரணம், அதற்கு அவ்வளவு கூட்டம் வரும். முதன் முதலில் தேர்தல் பிரசாரம் செய்த நடிகை பத்மினி. காங்கிரஸ் கட்சிக்காக செய்தார். கூட்டம் வரும், ஆனால் ஓட்டு விழுகாது.

சில படங்களில் நடிக்க வேண்டும் என்கிற நிர்பந்தத்தில், ஆசையில் சிலர் நடிகையாக வந்துவிடுவார்கள். ஒரே படத்தில், ‘ஐய்யய்யோ.. இது ஒரு தொழிலா’ என்று ஓடிவிடுவார்கள். சில நடிகைகள் டார்ச்சர் காரணமாக, சினிமாவை விட்டு ஒதுங்கிவிடுவார்கள். அப்படி ஒதுங்கியவர்களை பார்க்கலாம்.

இது நெகட்டிவ் சமாசாரம் தான், ஆனால், நடிகைளை பற்றி ‘இவ்வளவு தானா’ என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக தான் இதை சொல்கிறேன், மற்றபடி அவர்களை அவதூறு பரப்பும் எண்ணம் எனக்கில்லை. கமலுடன் நடித்த அபிராமி நடிகை அதன் பின் இரண்டு படம் தான் நடித்தார். அதோடு வெளிநாடு போய்விட்டார். சமீபத்தில் தான் வந்தார்.

நாட்டுப்புற பாடகி நடிகை, இயக்குனர் வற்புறுத்தலில் சினிமாவுக்கு வந்து, இங்கு வந்து பார்த்தபின், ‘ஏண்டா வந்தோம்..’ என்று கடுப்பாகி, தயாரிப்பாளரை அழைத்து, ‘சீக்கிரம் என் காட்சிகளை எடுத்து முடிங்க’ என்ற கூறி, அத்தோடு சினிமாவை விட்டு ஓடினார்.

சினிமா எந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருக்கிறதோ.. அந்த அளவிற்கு.. அதை நான் சொல்லக் கூடாது, நானும் சினிமாவில் இருப்பவன். சினிமா அந்த அளவிற்கு மோசமானது. மற்றொரு பரத நடிகை, ஒரு அமைச்சரின் தொடர்பில் இருந்தார். அரசியல் கட்டுப்பாட்டில் இருந்ததால், அவரை புக் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்கினர். அதோடு அவருடைய திரை வாழ்க்கை முடிந்தது. அப்புறம் ஒருவரை திருமணம் செய்தார், 3 மாதத்தில் விவாகரத்து செய்து வந்துவிட்டார்.

அதே போல கவர்ச்சியை கையில் எடுக்காத நடிகை, ரஜினி அறிமுகம் சீரியல் நடிகை, விஜய மூத்த நடிகை, இவர்கள் எல்லாருமே திருமணத்தால் வாய்ப்பை இழந்து வீட்டில் முடங்கியவர்கள் ஆவார்கள்,”
நடிகைகளின் பெயரர்களை குறிப்பிட்டு கூறிய கருத்துக்களை பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டுள்ளோம். இந்த கருத்துக்கள் அனைத்த்தும் பயில்வான் ரங்கநாதனனின் சொந்த கருத்துக்களே… எங்கள் கருத்துக்கள் அல்ல…

Related Articles

  • Be the first to comment

Back to top button