தமிழ் சினிமா

பல இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் குஷ்பு… 53 வயதில் செம ரொமான்ஸில் பர்த்டே செலிபிரேஷன்… போட்டோஸ் வைரல்.!!

நடிகை குஷ்பு தன்னுடைய கணவர் சுந்தர் சி மற்றும் குடும்பத்தினருடன், தன்னுடைய 53-ஆவது பிறந்தநாள் கொண்டாடிய போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது..

90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர்.

தமிழ்த் சினிமாவில் அறிமுகமாகி 35 ஆண்டுகள் ஆன பிறகும் கூட, கொஞ்சம் கூட அழகு குறையாமல் 23 வயது பெண் போல், பல இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வரும், நடிகை குஷ்பு இன்று, தன்னுடைய 53-ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கணவர் – மகள் மற்றும் நெருங்கிய குடும்ப நண்பர்களுடன், மத்தியில் மிகவும் இவரின் பர்த்டே செலபிரேஷன் நடந்து முடித்துள்ளது.

இதுகுறித்த சில புகைப்படங்களை நடிகையும், நம்ப தமிழ்நாட்டு மருமகளுமான குஷ்பு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, லைக்குகள் தாறுமாறாக குவிந்து வருகிறது.

53 வயதிலும் இவரை பார்த்தால், 1988-ம் ஆண்டு “தர்மத்தின் தலைவன்” படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் போது எப்படி இருந்தாரோ அப்படிதான் இருக்கிறார். குறிப்பாக தன்னுடைய இரண்டு மகள்களுக்கும் அழகில் செம்ம டஃப் கொடுக்கிறார் குஷ்பு.

தற்போது இவர் வெளியிட்டுள்ள பர்த்டே செலபிரேஷன் புகைப்படத்தில், மெரூன் கலர் புடவையில் அழகு தேவதை போல் ஜொலிக்கிறார். அதே போல்… தன்னுடைய கணவருடன் சேர்ந்து,ரொமான்டிக் லுக் விட்டுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

Related Articles

  • Be the first to comment

Back to top button