என்னால் சகிக்க முடியல… தென்னிந்திய சினிமாவில் இருந்து விலகியதற்கு இது தான் காரணமாம்… தமன்னா ஓபன் டாக்..!!
தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தமன்னா…
மும்பை: தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார் தமன்னா.’ஜெயிலர்’ படத்தில் அவர் நடித்த ‘காவாலா’ பாடல் சூப்பர் ஹிட்டானது.இப்போது இந்தி வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வரும் அவர், தென்னிந்திய படங்களில் இருந்து விலகி இருப்பது ஏன் என்று தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில், சில ஃபார்முலாக்கள் இருக்கின்றன. அவை எளிதானவை. சில கமர்சியல் படங்களில், எனது கதாபாத்திரங்களுடன் என்னால் பொருந்த முடியவில்லை. இயக்குநர்களிடம் அதைக் குறைக்கும்படி கேட்டிருக்கிறேன். சகிக்க முடியாத அளவுக்கு ஆணாதிக்கத்தைக் கொண்டாடும் படங்களில் நடிக்காமல் இருக்க முயற்சி செய்யத் தொடங்கினேன்.
தென்னிந்திய சினிமாவில் கிடைத்த வெற்றி இந்தியில் எனக்கு கிடைக்கவில்லையே என்று கேட்கிறார்கள். அதை தனிப்பட்ட தோல்வியாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் ஒரு படம் பலரின் பங்களிப்புடன் உருவாகிறது.
அந்த வகையில் எனது வெற்றி, தோல்வி இரண்டில் இருந்தும் விலகி இருக்கிறேன். தென்னிந்திய மொழிகளில் ஹீரோவை சகிக்க முடியாத அளவுக்கு கொண்டாடும் கதை அம்சத்தில் இருக்கும். அந்த மாதிரியான படங்களில் நடிக்காமல் இருக்கலாம் என்று தமன்னா கூறியுள்ளார். .ஹீரோவுக்கு மட்டும் ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து ஹீரோயின் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதை என்னால் சகிக்க முடியவில்லை.மற்றபடி சினிமாவுக்கு வந்து 17 வருடங்களுக்குப் பிறகும் ஒவ்வொரு நாளும் கேமராவை எதிர்கொள்ளும் ஆசையுடன் எழுகிறேன். நடிப்பதுஎன்பது எனக்கு மிகவும் பிடித்தது.. இவ்வாறு தமன்னா தெரிவித்துள்ளார்…