சினிமா தொடர்கள்

2 பாகங்களாக வெளியாகும் ஜூனியர் என்டி ஆரின் தேவரா படம்..!!

ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா திரைப்படம் 2 பாகங்களாக வெளியாகும் என படத்தின் இயக்குநர் கொரட்டலா சிவா தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார்.

ஜூனியர் என்டிஆரின் 30 ஆவது படமான இதற்கு ‘தேவரா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். சைஃப் அலிகான் வில்லனாக நடிக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படம் கடலை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்க உள்ளதாக படத்தின் இயக்குனர் கொரட்டாலா சிவா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “படமும் கதாபாத்திரங்களும் நாளுக்கு நாள் ஆழமாகவும் விரிவாகவும் செல்கின்றன. அதனால் ஒரு பாகத்துக்குள் படத்தை சொல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும்” என அறிவித்துள்ளார்..

  • Be the first to comment

Back to top button