தமிழ் சினிமா

கவர்ச்சிக்காக நடிகையை மாற்றிய படக்குழு… விடாமுயற்சி படம் குறித்து மாஸ் தகவல் ..!!

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நீண்ட மாதங்களாக இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்காமல் இருந்த நிலையில், ஒரு வழியாக கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி அஜர்பைஜான் நாட்டில் தொடங்கப்பட்டது.

அப்டேட் வெளியாகாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்த காரணத்தால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்தார்கள். ஒரு வழியாக விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள காரணத்தால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இருப்பினும் படத்தில் எந்தெந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

ஆனால், இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பது கிட்டத்தட்ட உறுதி என சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த திரைப்படத்தில் த்ரிஷா மற்றும் மற்றோரு நடிகையும் நடிக்க ஒப்பந்தம் ஆனாராம், அவர் வேறு யாரும் இல்லை வலிமை திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்த ஹுமா குரேஷி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனாராம்.

ஆனால், அவர் கவர்ச்சியாக நடிக்க சரியாக இருக்கமாட்டார் என்ற காரணத்தால் அவருக்கு பதிலாக அடுத்ததாக ரெஜினாவை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாம். படத்திற்கு சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்கவேண்டும் என்பதால் அதற்கு ஹுமா குரேஷி சற்று சரியாக இருக்கமாட்டார் என படக்குழுவுக்கு யோசனை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, ரெஜினியா கவர்ச்சியாகவும் நன்றாக நடனம் ஆட கூடியவர் அதைப்போல கவர்ச்சியாக நடிக்கவும் செய்பவர் என்பதால் அவரை கமிட் செய்துள்ளார்களாம். விரைவில் அவர் நடிக்கவுள்ளதையும் படத்திற்கான தயாரிப்பு நிறுவனமே அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். ஒரு வழியாக பல மாதங்கள்காத்திருந்த பிறகு விடாமுயற்சி ஷுட்டிங் தொடங்கியது.ரசிகர்கள் செம உற்சாகத்தில் இருக்கிறார்கள்..

Related Articles

  • Be the first to comment

Back to top button