கிசு கிசுதமிழ் சினிமா

மகளுக்காக அப்படி ஒரு தியாகம் செய்த ரஜினி… என்ன ஒரு தந்தை பாசம்..!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…இன்னும் மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது…

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் கூட இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ட்ரோல் செய்யப்பட்டது.

லால்சலாம் படத்தை முடித்த பின்னர் ரஜினி டிஜே ஞானவேல் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களாக தலைவர் 170 படத்தில் பணிபுரியும் நட்சத்திரங்களின் அறிவிப்பு ஒன்றின்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது.

இந்நிலையில்,இப்படத்திலிருந்து ரஜினியின் First லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இதுவரை பார்த்திராத மிரட்டலான லுக்கில் இருக்கிறார் ரஜினிகாந்த். மேலும், நேற்று முதல் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது என இந்த போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்திற்காக ரஜினிகாந்த் 90 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு முந்திய படங்களில் எல்லாம் ரஜினிகாந்த் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வந்த நிலையில், இந்த படத்திற்கு சம்பளத்தை குறைத்துள்ளார். இதற்கு காரணம் டிஜே ஞானவேல் ரஜினி கூட்டணியில் உருவாகும் படத்தையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தையும் லைக்காதான் தயாரிக்கிறதாம். மகளுக்காக தான் ரஜினிகாந்த் சம்பளத்தை குறைத்துக் கொண்டார் என சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்..லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக இருந்தாலும் அந்தத் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது..

Related Articles

  • Be the first to comment

Back to top button