தமிழ் சினிமா

‘லியோ’ டிரெய்லர்… 5 நிமிடத்தில்.. ஒரு மில்லியன் பார்வையாளர்கள்… புதிய சாதனை படைத்தது.!!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘லியோ’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி பயங்கரமான ஹைப்பை கிளப்பி வருகிறது…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய படம் ‘லியோ’. சமீபத்தில் ‘லியோ’ படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கும் நிலையில், இன்று படக்குழு ‘லியோ’வில் இருந்து த்ரிஷாவின் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இயக்குநர் லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்சில் இந்தப் படம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. விஜயின் வாய்ஸ் ஓவரில் டிரெய்லர் தொடங்குகிறது. ‘ஒரு சீரியல் கில்லர் நடு ரோட்டில் நின்று கொண்டிக்கும் எல்லோரையும் கொல்றான். அவனை சின்சியரான போலீஸ் அதிகாரி அவனை திருப்பி சுட…அந்த துப்பாக்கி தற்போது அவன் கையில் இருக்கு. நீ என்ன செய்வ?’ என விஜய் கேட்கும்படியாக அந்த டிரெய்லர் தொடங்கி வருகிறது.

முன்பு லோகேஷ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ பட டிரெய்லரில் விஜய் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தார். ஆனால், லியோவில் அதற்கு நேர் எதிராக இருக்கிறது. த்ரிஷா, குழந்தை என அமைதியான ஒரு விஜயும், இன்னொரு பக்கம் லியோ தாஸாக இன்னொரு விஜயும் இருப்பது டிரெய்லரில் தெளிவாகியுள்ளது.

அர்ஜூன், சஞ்சய் தத், கெளதம் மேனன் ஆகியோர் இடம்பெற்றுள்ள இந்த டிரெய்லரில் அளவுக்கதிகமான வன்முறையும், சண்டைக் காட்சிகளும், விஜய் தகாத வார்த்தையில் பேசும்படியான வசனமும் இடம்பெற்றுள்ளது. வெளியான ஐந்து நிமிடத்திலேயே ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது ‘லியோ’ டிரெய்லர்.ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர்..

Related Articles

  • Be the first to comment

Back to top button