தமிழ் சினிமா

மிடில் க்ளாஸில் ஆரம்பித்தது சந்தானத்தின் வாழ்க்கை… இப்போ சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி இப்போது ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம்…

இவருடைய சொத்து மதிப்பு இவ்வளவா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

ஆரம்பத்தில் ஒரு மிடில் க்ளாஸ் வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டு வந்தார் சந்தானம்.

அதன் பிறகு விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் கிடைத்த புகழால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தார்.லொள்ளு சபாவில் கிடைத்த வரவேற்பு வெள்ளித்திரையில் இவரை அப்படியே அணைத்துக் கொண்டது.

ஆரம்பத்தில் ஒரு நகைச்சுவை நடிகராகத்தான் வெள்ளித்திரையில் பயணிக்க ஆரம்பித்தார். அதில் மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு திடீரென ஹீரோ அவதாரம் எடுத்து ஷாக் கொடுத்தார்.

இருந்தாலும் ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. சமீபத்தில் வெளியான தில்லுக்கு துட்டி, டிடி ரிட்டர்ன்ஸ் போன்ற படங்கள் கூட நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் சந்தானத்தின் சொத்து மதிப்பு குறித்து சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சந்தானத்திற்கு சென்னையில் ஒரு வீடு இருக்கும் பட்சத்தில் சில லாபகரமான ரியல் எஸ்டேட் பிஸினஸ்களும் செய்து வருகிறாராம்.

இரண்டு சொகுசு கார்களுடன் ஆரம்பத்தில் முதன் முதலில் வாங்கிய காரையும் நியாபகமாக வைத்திருக்கிறாராம் சந்தானம். நகைச்சுவை நடிகனாக இருக்கும் போதே 3 கோடியில் இருந்து 5 கோடி வாங்கும் நடிகராகத்தான் இருந்திருக்கிறார்.

இப்போது ஹீரோவாக ஒரு படத்திற்கு 15 கோடியில் இருந்து 20 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. அதனால் இவரின் சொத்து மதிப்பு 120 கோடியில் இருந்து 150கோடி வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது..

Related Articles

  • Be the first to comment

Back to top button