தமிழ் சினிமா

லியோ ட்ரைலர் கொண்டாட்டம்… ரோகிணி தியேட்டர் இருக்கையை துவம்சம் செய்த விஜய் ரசிகர்கள்… உரிமையாளர் செய்த நெகிழ்சி செயல்.!!

தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்து முடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனது.

இந்த ட்ரெய்லரை விஜய் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ரோகினி திரையரங்கம் உள்ளிட்ட ஒரு சில திரையரங்கங்கள் வெளியிட்டன. எனவே திரையரங்கு முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூறியதால் அந்த இடமே மிகவும் பரபப்பாக காணப்பட்டது. பின்னர் சரியாக நேற்று மாலை 6:30 மணிக்கு ‘லியோ’ திரைப்படத்தின் டிரைலர் திரையரங்கில் ஒளிபரப்பான நிலையில், பிரம்மாண்ட திரையில் ரசிகர்கள் அனைவரும் தளபதியின் மாஸான ‘லியோ’ பட டிரைலரை கண்டு ரசித்தனர்.

திரையரங்கின் வெளியே பாலபிஷேகம், பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்கள்… உள்ளே கலர் தாள்களை தூக்கி எறிந்து ஆரவாரம் செய்தனர். மேலும் சிலர் ரோகிணி திரையரங்கில் உள்ள சுமார் 400 சேர்களை அடித்து நொறுக்கியதில், ரோகிணி திரையரங்க உரிமையாளருக்கு, சுமார் 10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ரசிகர்களால் திரையரங்கில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஆனாலும் இதுவரை திரையரங்கு உரிமையாளர் சார்பில் இருந்து எந்த ஒரு புகாரும் ரசிகர்கள் மீது காவல் நிலையத்தில் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ரோகிணி திரையரங்கு உரிமையாளரின் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது..

Related Articles

  • Be the first to comment

Back to top button