பாலிவுட்

தொடர் கொலை மிரட்டல்… நடிகர் ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ்  பாதுகாப்பு..!!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘பதான்’, ‘ஜவான்’ என இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் 1000 கோடிக்கு மேல்  வசூல் செய்தது..ஒரே ஆண்டில் 2000 கோடி வசூல் கொடுத்த நடிகர் என்ற சாதனை படைத்தார். 

நடிகர் ஷாருக்கானுக்கு மகாராஷ்டிரா காவல்துறை ஒய் பிளஸ் பாதுகாப்பை வழங்கி உள்ளது.

கொலை மிரட்டலை தொடர்ந்து நடிகர் ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது மகாராஷ்டிரா அரசு.

பதான் மற்றும் ஜவான் படங்களுக்கு பிறகு தனக்கு கொலை மிரட்டல் அழைப்புகள் வருவதாக ஷாருக்கான் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த நிலையில் மகராஷ்டிரா காவல்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

பதான், ஜவான் என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்து ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்த சூழலில் ஷாருக்காருனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Related Articles

  • Be the first to comment

Back to top button