தமிழ் சினிமா

லியோ 3வது சிங்கிள் ரிலீஸ்… “அன்பெனும் ஆயுதம்” சிறப்பு காட்சி… இன்றைய சினிமா அப்டேட்ஸ்..!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படம் அறிவிப்பு வெளியானது முதல் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வெளியான பாடல்களுக்கும் ரசிகர்கள் ஃபயர் விட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் பல்வேறு காரணங்களால் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஆனாலும் படத்திற்கான எதிர்பார்ப்பு நாள்தோறும் எகிறிக்கொண்டே உள்ளது.

இந்நிலையில் லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக லியோ படக்குழு தரப்பிலிருந்து ‘அக்டோபர் 19 ஆம் தேதி அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கும், 20 ஆம் தேதியில் இருந்து 24 ஆம் தேதி வரை காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பு செய்ய வேண்டும்’ என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு பதிலாக காலை 9 மணி ஷோக்களுக்கே தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிகிறது.

அதாவது நேரம் குறிப்பிடாமல் ஒரு நாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே காலை 9 மணிக்கு லியோ ஷோ தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘லியோ’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘அன்பெனும்’ பாடல் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், தற்போது மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இப்பாடலை விஷண் எடவன் எழுதியுள்ளார். அனிருத், லோதிகா இணைந்து பாடியுள்ளனர்.

‘அன்பெனும் ஆயுதம்’ என்கிற இந்த பாடல், லியோ திரைப்படத்தில் விஜய் – த்ரிஷா இருவருக்கும் இடையேயான அழகான வாழ்க்கையை சித்தரிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. பாடலில் இவர்களுடன் கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் போன்றோரும் உள்ளனர்.இன்று விஜய் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்..

Related Articles

  • Be the first to comment

Back to top button