தமிழ் சினிமா

பொங்கல் விருந்தாக வருகிறது லால் சலாம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது..!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் லால் சலாம் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் இந்த படத்தில் மொய்தீன் பாய் கேரக்டரில் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் இது .இவர் மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு  விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்த தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

திருவண்ணாமலையில் படப்பிடிப்பு எடுக்கப்பட்ட நிலையில், கிர்க்கெட்டை மையப்படுத்தி லால் சலாம் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் குறைந்தபட்சம் 35 நிமிடங்களே வருவதற்கு ரூ.40 கோடியை சம்பளமாக ரஜினி பெற்றதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் முடிந்த நிலையில், படம் ரிலீஸ்க்கு தாயாராகியுள்ளது.

இந்த நிலையில் லால் சலாம் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், லால் சலாம் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தனுஷ் நடித்த 3 மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கிரிக்கெட் வீரர்களாக நடித்துள்ளனர்.இந்த படம் பொங்கல் விருந்தாக வர இருக்கிறது. ரஜினி ரசிகர்கள் செம உற்சாகத்தில் இருக்கிறார்கள்..

Related Articles

  • Be the first to comment

Back to top button