தமிழ் சினிமா

நடிகர் ரஜினிக்கு இப்படி ஒரு ரசிகன்… கருங்கல்லில் சிலை வைத்த நெகிழ்ச்சி சம்பவம் வைரல்..!!

மதுரையில் 3 அடி உயரம் – 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லில் ரஜினி சிலை வடிவமைக்கப்பட்ட நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வரும் முன்னாள் துணை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கார்த்திக் என்ற இளைஞர். இவர் தேவி திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். இவர் சிறுவயது முதலே ரஜினியின் தீவிர ரசிகராவார். ரஜினிகாந்தின் முதல் படமான அபூர்வராகங்களில் இருந்து ஜெயிலர் படத்தின் போஸ்டர் வரை கார்த்தி தனது அலுவகத்தில் ரஜினிக்கு என்று ஒரு அறையை ஒதுக்கி அதில் ரஜினியின் பல்வேறு புகைப்படம் வைத்து வழிபட்டு வருகிறார்.

இந்நிலையில் அந்த அறையில் ஒட்டி வைத்த ரஜினியின் படங்களுக்கு நாள் தோறும் தீபாராதனை, அபிஷேகம் செய்து வரும் கார்த்திக். இன்று ஒருபடி மேல் சென்று தற்போது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருந்து கோவிலுக்கு என்று பிரத்தியோகமாக வெட்டப்படும் கற்களில் இருந்து வெட்டி எடுத்து வந்து 3 அடி உயரத்தில்., 250 கிலோ எடையில் கருங்கல்லினால் ரஜினிக்கு சிலை வடிவமைத்து. இன்று அந்தசிலைக்கு வேத விற்பன்னர்களால் யாகம் வளர்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவது போன்று ரஜினியின் சிலைக்கு பூஜைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து., பூஜை முடிந்த பின்னர் அச்சிலையை எடுத்து கோவிலாக வழிபடும் அறையில் வைத்து, ரசிகரான கார்த்திக் பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட ஆறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து தீபாராதனை நடத்தினார். அவருக்கு ஒரு உறுதுணையாக அவரது தாய்., மனைவி., மகள் மற்றும் சகோதரர்கள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே நடிகர் ரஜினிக்கு கருங்கல்லினால் ஆன சிலையை அமைத்து, நாள்தோறும் அதற்கு அபிஷேகமும், தீபஆராதனைகளும் செய்து வரும் கார்த்தியின் செயல் வினோதமானதே. இதனை பலரும் விமர்சனம் செய்தாலும் நான் வணங்கும் தெய்வம் ரஜினிகாந்த் என்று அவரது குடும்பத்தினர் பெருமைபடுகின்றனர். இப்படியும் ஒரு ரசிகர் இருக்கிறார் என்று மதுரை மக்கள் வியந்து பார்க்கிறார்கள்..

Related Articles

  • Be the first to comment

Back to top button