விடாமுயற்சி படக்குழுவினருக்கு மெடிக்கல் செக்கப்- அஜித்தின் அன்பு வேண்டுகோள்..!!
அஜித்தின் 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது. அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர்.
அஜித் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் ’விடாமுயற்சி’. மகிழ்திருமேனி இயக்கத்தில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அஜர்பைஜான் தேசத்தில் அப்படி நடைபெற்ற படப்பிடிப்பில், எதிர்பாரா விதமாக நேரிட்ட துயரம் அஜித் உட்பட படக்குழுவினர் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். இதன் பாதிப்பு எதிரொலி அஜித் அதிரடியில் இறங்கி பட குழுவினரை மெடிக்கல் செக்கப் செய்ய அறிவுறுத்தினார்.
இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் தொடங்கியுள்ளது.அஜித்தின் உத்தரவால் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்துள்ளார்..
இந்நிலையில் இப்போது விடாமுயற்சி படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய அஜித், தயாரிப்பு நிறுவனம் மூலமாக ஏற்பாடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பு காரணமாக அஜர்பைஜானில் உயிரிழந்தார் என்பதால் இந்த மருத்துவப் பரிசோதனைக்கு அஜித் வலியுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
Be the first to comment