தமிழ் சினிமா

தலைவர் 172-வது படம்… இயக்குநர் இவர்தானாம்..!!

சூப்பர் ஸ்டாருக்கு வயசானாலும் இன்னும் இளமையாகவும், எனர்ஜியாகாவும் இருக்கிறார் என்று ஆச்சரியபட பார்க்கும் அளவுக்கு அவர் சுறுசுறுப்புடன் இருக்கிறார்.

இதற்கு ஜெயிலர் படம் கொடுத்த வெற்றியும் ஒரு காரணமாக இருக்கலாம். தற்போது லால் சலாம் படத்தை முடித்துள்ள அவர் அடுத்ததாக தன்னுடைய 170 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.

லைக்கா தயாரிப்பில் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் இளமையான தோற்றத்துடன் நடிக்கிறார். இது குறித்த போட்டோக்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. இதை அடுத்து லோகேஷ் இயக்கத்தில் தலைவர் 171 படமும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

ரஜினிக்காக தனித்துவமாக உருவாகும் இப்படம் அடுத்த மார்ச் மாதம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த சூழலில் சூப்பர் ஸ்டாரின் 172வது படம் பற்றிய தகவல்களும் ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது. ஏற்கனவே இது பற்றி அரசல் புரசலாக பேசப்பட்ட நிலையில் தற்போது இயக்குனர் யார் என்ற விஷயமும் கசிந்துள்ளது.

அதன்படி மாரி செல்வராஜ் தான் இப்போது ரஜினிக்கு ஆக்ஷன் சொல்ல இருக்கிறார். அதற்கான கதையைக் கேட்ட சூப்பர் ஸ்டார் தற்போது நடிப்பதற்கு சம்மதம் சொல்லிவிட்டாராம். மாமன்னன் மூலம் சில சர்ச்சையில் சிக்கிய மாரி செல்வராஜ் இப்போது தலைவர் 172 ஸ்கிரிப்டை பார்த்து பார்த்து தயார் செய்து வருகிறார்.

அதன்படி இது ரஜினியின் படமாக இல்லாமல் மாரி செல்வராஜின் படமாக தான் உருவாக இருக்கிறதாம். அப்படி என்றால் நிச்சயம் ஏதாவது ஒரு சம்பவம் இருக்கும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. சமீப காலமாக சூப்பர் ஸ்டார் வெற்றி இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் லோகேஷுக்கு அடுத்து ரஜினியை இயக்கப் போவது யார் என பேசப்பட்ட நிலையில் முதல் ஆளாக துண்டு போட்டு இடத்தை பிடித்துள்ளார் மாரி செல்வராஜ். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது. ஆக மொத்தம் சூப்பர் ஸ்டார் அப்பப்போ பல சர்ப்ரைஸ்கள் ரசிகர்களுக்கு கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தி கொண்டே இருக்கிறார்..

Related Articles

  • Be the first to comment

Back to top button