தமிழ் சினிமா

மீண்டும் இணையும் உலகநாயகன் -மணிரத்தினம்… மருதநாயகம் தோற்றத்தில் வேலு நாயக்கர் ஸ்டைலில்.. மிரட்டும் Thug Life வீடியோ..!!

உலக நாயகன் கமல் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.விக்ரம் படத்தின் மூலம் இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தனது 234-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன் ஷூட்டிங் தற்போது நடைபெறுகிறது. இந்த படத்தின் டைட்டில் ‘தக் லைஃப்’ என மிரட்டலான டீசர் வெளியானது.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் ரிலீஸுக்காக ஒட்டு மொத்த சினிமாவும் காத்திருக்கிறது. இது தவிர பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி படத்தில் கமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சூழலில் நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்தினம் மற்றும் கமல் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருக்கிறது. இது கமலின் 234 ஆவது படமாகும். இந்நிலையில் கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கமல் 234 படத்தை தயாரிக்கிறது.

இன்று கமலின் பிறந்தநாளை முன்னிட்டு காலை ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது. அதாவது இன்று மாலை 5 மணிக்கு கமல் 234 படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதாவது இதில் கமலின் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற ஆரம்ப புள்ளியாக தொடங்குகிறது. இந்த படத்திற்கு ‘Thug Life’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார். மேலும் நாயகன் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த நிலையில் கண்டிப்பாக இந்த படம் தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் இடம்பெறும் என நம்பப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் வசூலை வாரி குவித்து மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்திருந்தது.

இப்படி இருக்கும் நிலையில் கமல் மற்றும் மணிரத்தினம் கூட்டணி போட்டால் சொல்லவா வேண்டும். கண்டிப்பாக தரமான சம்பவம் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் மற்ற நடிகர், நடிகைகளின் விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த டைட்டில் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணி ரசிகர்களுக்கு செம் விருந்தாக இருக்கும்..

Related Articles

  • Be the first to comment

Back to top button