தமிழ் சினிமா

வேட்டையாடு விளையாடு வில்லன்… தோள் மேல் கைப்போட்டு பாராட்டிய ரஜினி..!!

தமிழ் சினிமாவில் சில வில்லன் நடிகர்கள் மட்டுமே ரசிகர்களை மிகவும் ஈர்த்தவர்கள் இருப்பார்கள். நம்பியார், அசோகன், சத்யராஜ், ரகுவரன், பிரகாஷ்ராஜ், நாசர் என குறிப்பிட்ட சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பல வருடங்கள் நிலைத்து நின்றனர் .

ரகுவரன் ஒரு மிகச்சிறந்த நடிகர். அவரை பிடிக்காதவர்கள் என யாருமே இருக்க முடியாது. அவரை போல நடிக்க இதுவரை யாரும் வரவில்லை. அதனால்தான் ரஜினி அவரை தனது படங்களில் தொடர்ந்து வில்லனாக நடிக்க வைத்தார். ரஜினிக்கு மிகவும் பிடித்த வில்லன் நடிகர் அவர்தான்.

ஒருகட்டத்தில் புதிய புதிய இளம் நடிகர்களை கூட இயக்குனர்கள் தங்களின் படங்களில் வில்லனாக நடிக்க வைத்தனர். இதில் முக்கியமானவர் கௌதம் மேனன். இவரின் படங்களில் புதிய புதிய வில்லன் நடிகர்கள் நடித்துள்ளனர். அப்படி அவர் இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக கலக்கியவர்தான் டேனியல் பாலாஜி.

இந்த படத்தில் மருத்துவம் படித்த அதேநேரம் தொடர் கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரனாகவும் நடித்திருந்தார். இந்த படத்தில் வில்லனாக அசத்தலான வேடத்தில் டேனியல் பாலாஜி கலக்கியிருந்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய டேனியல் பாலாஜி ‘இந்த படத்தை ரஜினி சார் பார்த்தார். படம் முடிந்து தயாரிப்பாளர், இயக்குனர், கமல் என எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தனர். எனவே, நான் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ‘வில்லனாக நடித்த அந்த பையன் எங்க?’ என கேட்டார். என்னை அழைத்து அவருக்கு அறிமுகம் செய்து வைக்க இருபது நிமிடம் என் தோள் மேல் கைப்போட்டு பேசிக்கொண்டிருந்தார்.

பேசும்போது அவ்வப்போது என் முகத்தை ஏற இறங்க பார்த்துக்கொண்டே இருந்தார். அதன்பின் கிளம்பும் முன் என்னை தேடி வந்து என்னிடம் ‘பாய் பாய்’ என சொல்லி விட்டு போனார். எனக்கு அது மிகவும் சந்தோஷமாக இருந்தது’ ஏதோ சொர்க்கத்தில் மிதப்பது போல் இருந்தது என டேனியல் பாலாஜி மனம் திறந்து பேசினார்..

:

Related Articles

Back to top button