பாலிவுட்

இதை மட்டும் செய்யுங்க போதும்… முகமது ஷமியை திருமணம் செய்து கொள்ள நான் ரெடி… ஓப்பனாக ப்ரோபோஸ் செய்த நடிகை பாயல் கோஷ்..!!

சென்னை: நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமாக பந்துவீசி அசத்திக் கொண்டிருக்கிறார் முகமது ஷமி. அவருக்கு இப்போது திருமண வாய்ப்பு தேடி வந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகையான பாயல் கோஷ் வெளிப்படையாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். அதில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது ஷமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள நான் தயார், ஆனால் ஒரு கண்டிஷன் என தெரிவித்துள்ளார்.

50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியில் சிறப்பாக ஆடி வரும் முகமது ஷமியை திருமணம் செய்து கொள்ள நடிகையும், அரசியல்வாதியுமான பாயல் கோஷ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதோடு அவர் ஒரு கண்டிஷனையும் வைத்துள்ளார்.

இந்தியாவில் 50 ஓவர் உலககோப்பை போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியா விளையாடி உள்ள 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று செமி பைனல் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி அசத்தி வருகிறார். முதல் 4 போட்டிகளில் வாய்ப்பு இல்லாத நிலையில் அடுத்த 4 போட்டிகளில் களமிறங்கினார். இதில் 2 போட்டிகளில் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி தற்போது மொத்தம் 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் தற்போதைய சூழலில் எதிரணி வீரர்கள் முகமது ஷமியை எதிர்கொள்ள அச்சப்பட்டு வருகின்றனர். இதனை பல வர்ணணையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பணமாக முகமது ஷமி மாறியுள்ளதாக வர்ணனை வேளைகளில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் முகமது ஷமியை திருமணம் செய்து கொள்ள நடிகையும், அரசியல்வாதியுமான ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார். முகமது ஷமிக்கும் ஏற்கனவே திருமணமாகி இருந்தார். அவரது முதல் மனைவி ஹசின் ஜஹான் அவரை விட்டு பிரிந்தார். முகமது ஷமி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் பிரிந்து சென்றார்.

இந்நிலையில் தான் நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரபலமான பாயல் கோஷ், ஷமியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஷமியை திருமணம் செய்து கொள்ள கண்டிஷன் ஒன்றையும் விதித்துள்ளார். இதுதொடர்பாக பாயல் கோஷ் தனது எக்ஸ் பக்கத்தில், ”முகமது ஷமி தனது ஆங்கில திறனை இன்னும் வளப்படுத்தி கொண்டால் நான் அவரை திருமணம் செய்து கொள்ள தயார்” என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவுக்கு முகமது ஷமி தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதற்கிடையே தான் முகமது ஷமிக்கு ப்ரோபோஸ் செய்த பாயல் கோஷ் யார்? என்பது பற்றி பலரும் இணையதளங்களில் தேடி தொடங்கி உள்ளனர். அதாவது பாயல் கோஷ் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 1992ல் பிறந்தார். இவர் தூய பால் மிஷன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.

அதன்பிறகு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் டிகிர முடித்தார். அதன்பிறகு சினிமாவில் நடிகையாகும் ஆர்வத்தில் மும்பைக்கு சென்றார். அங்கு அவர் பிரயாணம் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு வர்ஷதாரி, ஊசாராவெல்லி, மிஸ்டர் ரஷ்கல், படேல் கி பஞ்சபி ஷாதி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு அவர் கடந்த 2020ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். இவர் ராம்தாஸ் அத்வாலே கட்சியில் இணைந்தார். அந்த கட்சியின் மகளிர் அணியின் துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பாலிவுட் நடிகையான பாயல் கோஷ் வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்துவிட்டார் அந்த கிரிக்கெட் வீரரின் என்ன சொல்ல போறாருனு ரசிகர்கள் செம எதிர்பார்ப்பில் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்..

Related Articles

  • Be the first to comment

Back to top button