ஹாலிவுட்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி நடிக்கும் புதிய  படம் – ‘எல்ஐசி’ 

This image has an empty alt attribute; its file name is c9848f0f4aa21ffbd0a0dbd81530cb90df613f21dd341147fbc07eff5c5a50fc.webp

அஜித் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார். சில காரணங்களால் அந்த படம் தொடங்கப்படவில்லை. இதையடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்போது ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்தார். இந்த நிலையில், இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இப்படத்துக்கு ‘எல்ஐசி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் கிரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின், யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் பூஜையை தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

  • Be the first to comment

Back to top button