கிசு கிசு

என்னது!! எனக்கும் விஜய்க்கும் போட்டியா..? அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்… சூப்பர் ஸ்டார் ஓபன் டாக்..!!

என்னது!! எனக்கும் விஜய்க்கும் போட்டியா..? அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்.. எனக்கும் விஜய்க்கும் எப்போதும் போட்டி இருந்ததே இல்லை… நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்து பேசியுள்ளார்..!!

ரஜினிக்கு விஜய் போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது, ஜெய்லர் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவின் போது நான் பேசிய கழுகு காக்கா கதை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விவாதம் ஆனதை நினைத்து வருந்துகிறேன்.ரஜினிக்கு விஜய் போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை; விஜய்க்கு ரஜினி போட்டி என அவர் நினைத்தால் அது அவருக்கு மரியாதை இல்லை. விஜய்க்கு போட்டி விஜய்தான் என்று அவரே சொல்லியிருக்கிறார். விஜய் என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் ஷூட்டிங் அப்போ விஜய்க்கு 13, 14 வயசிருக்கும். ஷூட்டிங் பார்த்துட்டிருந்தாங்க. ஷுட் முடிஞ்சதும் சந்திரசேகர் அறிமுகப்படுத்தினார்.

“என் பையன். நடிப்புல ரொம்ப ஆர்வம் இருக்கு. நீங்க சொல்லுங்க. படிச்சுட்டு வந்து ஆக்ட் பண்லாம்”ன்னு நீங்க சொல்லுங்க”னார். அப்ப விஜய்ட்ட “நல்லா படிப்பா. அதுக்கப்புறம் ஆக்டர் ஆகலாம்”னு சொன்னேன்.

அதுக்கப்பறம் விஜய் ஆக்டர் ஆகி, படிப்படியா அவருடைய டிசிப்ளின், திறமை, உழைப்பால இப்ப உயர்வான இடத்துல இருக்கார். நெக்ஸ்ட் அரசியல்… சமூகசேவைனு போக இருக்கார். இதுல வந்துட்டு… எனக்கும் விஜய்க்கும் போட்டினு சொல்றது நெஜம்மா… ரொம்ப கஷ்டமா இருக்கு மனசு.

தயவு செஞ்சு ரெண்டு பேர் ஃபேன்ஸும் ஒப்பிடவேண்டாம்.போதும் இதோட நிறுத்துங்க … இது என்னுடைய அன்பான வேண்டுகோள்… ப்ளீஸ்.. ரொம்ப நன்றி என்றார்.

Related Articles

  • Be the first to comment

Back to top button