கிசு கிசு

சபாஷ்!! 25 வருடம் வர வரேன்னு சொல்லி மிளகாய் அரைத்தார் ரஜினி.. பார்ட் டைம் அரசியல்வாதி ஆனார் கமல்… தில்லாக இறங்கி இருக்கார் விஜய்… சூடு பிடிச்சுருச்சு அரசியல் களம்..!!

ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு நடிகர் விஜய்யின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே இனி முழு நேர அரசியல் தான். ஏற்கனவே கமிட் ஆன படத்தை மட்டும் முடித்துக் கொடுத்து விட்டு வருகிறேன் என கெத்தாக சொல்லி இருக்கிறார் தளபதி விஜய்.

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த விஜய்யின் கட்சி பெயர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சில வருடங்களாகவே அதற்கான வேலைகளை சத்தம் இல்லாமல் செய்து வந்த விஜய் தற்போது தன்னுடைய தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் பெயரை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இதனால் தற்போது சோசியல் மீடியாவே பரபரப்பாகி இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் நடிகர்களில் எத்தனை பேர் சாதித்திருக்கிறார்கள் என்ற விவாதமும் ஒரு பக்கம் எழுந்துள்ளது

அதன் படி கடந்த 25 வருடமாக ரஜினி அரசியலுக்கு வருவேன் என மிளகாய் அரைத்த கதையையும் மக்கள் மறந்து விடவில்லை. அதேபோல் கட்சியை தொடங்கி விட்டு அடுத்தடுத்து சினிமாவில் நடித்து வரும் கமல் அரசியலை பார்ட் டைம் வேலையாக தான் பார்க்கிறார்.

இதற்கிடையில் தில்லாக களமிறங்கி இருக்கும் விஜய்யின் அரசியல் எப்படி இருக்கும் என்பதை காண மக்களும் ஆர்வத்துடன் தான் இருக்கின்றனர். புலி வருது புலி வருதுன்னு பூச்சாண்டி காட்டாமல் துணிச்சலாக அரசியலில் கால் பதித்துள்ள விஜய்க்கு இப்போது நாலா பக்கம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இவருடைய அரசியல் மற்றும் தலைமை எப்படி இருக்கும் என்ற ஒரு விவாதமும் தற்போது எழுந்துள்ளது. ஏனென்றால் சினிமா வேறு அரசியல் வேறு என்பது மறுக்க முடியாத உண்மை. அதன்படி அரசியலுக்கு வந்த பல நடிகர்கள் தங்கள் இமேஜை கெடுத்துக் கொண்ட கதையும் இருக்கிறது.

அந்த வகையில் விஜய்க்கும் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம். அதையெல்லாம் அவர் எப்படி கடந்து வர போகிறார்? யாருக்கு எதிராக அரசியல் செய்யப் போகிறார்? என்பதும் தற்போது எதிர்பார்க்கப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. இருப்பினும் விஜய் ஒரு சிறந்த தலைவனாக இருந்தால் எம்.ஜி.ஆருக்கு அடுத்தப்படியான இடம் இவருக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இனி தமிழக அரசியல் ஸ்டாலின் Vs விஜய் அல்லது உதய் Vs விஜய் அல்லது வேற யாராவது என்ட்ரி கொடுத்தா விஜய் எனும் திசையை நோக்கி நகரும். என பலரும் கூறியுள்ளனர்..

Related Articles

  • Be the first to comment

Back to top button