கிசு கிசுதமிழ் சினிமா

தளபதி விஜய் செம பிட்டாக வலம் வரும் இரகசியம் தெரியுமா..?ஓ!! இதுதானா..!!

சென்னை: விஜய் பற்றி  இதுவரை யாருக்கும் பெரிதும் தெரியாத புட் டயட் பற்றி பார்ப்போமா..!!

  எப்போதும் புன்னகை, அமைதி என்று திரைப்பட விழாக்களில் வலம் வரும் நடிகர் விஜய், சினிமாவில் அதற்கு எதிராக துள்ளல் நடனம், நக்கல், நய்யாண்டி, கோபம், சண்டை, காதல் என பட்டையை கிளப்பி விடுவார்.

அது தான், ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கு வலுவான அடித்தளத்தை அமைத்து தந்தது எனலாம்.

தந்தை எஸ்.ஏ. சந்திர சேகரின் இயக்கத்தில் உருவான நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமான விஜய். இதையடுத்து, செந்தூரப்பாண்டி, ரசிகன், ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், சினிமாவில் ஒரு நல்ல இடத்தை இவரால் பெற முடியாமல் இருந்தது. அப்போது தான், விக்ரமன் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக படத்தில் நடித்தார். இந்த படம் விஜய்யின் திரைப்பயணத்திற்கு திருப்பு முனையாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து 90காலகட்டத்தில் இருந்து அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய், நாளைய தீர்ப்பு படத்தில் எப்படி இருந்தாரோ அதே ஃபிட்டுடன் இப்போதும் இருக்கிறார். அதற்கு என்ன காரணம், என்ன மாதிரியான உணவை அவர் எடுத்துக்கொள்கிறார் என்று பார்க்கலாம்.

 

நடிகர் விஜய்யின் இந்த ஃபிட்டான உடல் பராமரிப்பு முக்கிய காரணம் சரியான நேரத்தில் தூங்குவது, சரியான நேரத்தில் சாப்பிடுவது, தேவையான நேரத்தில் ஓய்வு எடுப்பது தானாம். அவர் படப்பிடிப்பில் இருந்தாலும், இல்லா விட்டாலும் இரவு ஏழு மணி ஆனால் இரவு சாப்பாட்டை முடித்து சிறிது நேரம் நடப்பாராம். அதே போல, தினமும் சரியாக 9.30 மணிக்கெல்லாம் தூங்கும் பழக்கத்தை வைத்து இருக்கும் விஜய், இந்த பழக்கத்தின் காரணமாக, நைட் ஷூட்டிங்கும், இரவு நேர பார்ட்டி, கெட்டுகெதர் நிகழ்ச்சிகளை தவிர்த்து விடுவாராம்.

அதே போல, காலை 5.30 மணிக்கெல்லாம் எழுந்து, அரை மணி, மிகவும் எளிமையான ஒர்க் அவுட்டுகள் செய்வது இவருடைய வழக்கமாம். வெளிநாட்டில் ஷூட்டிங் இருந்தாலும், அதிகாலை எழுந்து ஒர்க் அவுட் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அதே போல விஜய் அசைவ உணவு என்றால் ரொம்ப விரும்பி சாப்பிடுவார். அதுவும் அம்மா ஷோபா கையால் சமைத்தது என்றால் ஒரு பிடி பிடிக்கும் விஜய். அண்மைக்காலமாக அசைவ உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்த்து வருகிறாராம். அவருக்கு ரொம்ப பிடித்த உணவு தோசையாம், அதுவும் இரண்டு தோசைக்கு மேல் சாப்பிட மாட்டாராம், இதை அவரின் அம்மா ஷோபாவே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 

ஹோட்டல் உணவில் ஈடுபாடு இல்லாத விஜய், வெளியூர் பயண நேரத்தில், வேறு வழியில்லாத நேரத்தில் மட்டுமே ஹோட்டல் உணவுகளை சாப்பிடுவாராம். அதே நேரத்தில் படப்பிடிப்பின் போது ஓய்வு நேரம் இருந்தால், நண்பர்களுடன் சிறிது நேரம் மட்டுமே அரட்டை அடித்து விட்டு, ஓய்வு எடுக்க சென்று விடுவாராம். அதே போல, விஜய்க்கு டீ, காஃபி குடிக்கும் பழக்கம் இல்லையாம். இப்படி விஜய் தனக்குத் தானே சில கட்டுப்பாடுகளை வைத்து இருப்பதால் தான் இந்த வயதிலும் செம ஃபிட்டாக இருக்கிறார்..

Related Articles

  • Be the first to comment

Back to top button