கிசு கிசுதமிழ் சினிமா

சிவகார்த்திகேயனுக்கு வந்த போன்!! தன் புரோமோஷனை சத்தமில்லாமல் செய்த அஜித்… தளபதி மீது உச்சகட்ட பொறாமையில் தல..!!

தல அஜித்திடம் பொதுவாகவே தளபதி விஜய் மீது ஒரு பொறாமை குணம் இருக்கும் என்பதை சமீபத்திய நிகழ்வு காட்டி கொடுத்து விட்டது..

ஆனால் இதை பல நாட்களாகவே அவர் சத்தம் இல்லாமல் செய்து கொண்டு இருப்பது குறித்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் விஜய் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட இருக்கும் இடம் தெரியாமல் இருந்த அஜித் குறித்து தினமும் ஒரு புகைப்படம் வருவது அவர் ரசிகர்களுக்கே கொஞ்சம் விசித்திரமான விஷயமாகி இருக்கிறது.

இதற்கு பின்னால் ஒரு அதிர்ச்சி சம்பவம் இருப்பதாக கூறுகின்றனர். அதாவது சிவகார்த்திகேயன் துணிவு ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தினை சந்தித்து இருக்கிறார். அப்போது இருவரும் போட்டோ எடுத்து கொண்டு இருந்தனர். ஆனால் அஜித் எப்போதும் போல இதை இப்போது வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டாராம். அது போல சிவாவும் வெளியில் விடாமல் இருந்து வந்து இருக்கிறார்.

திடீரென அஜித்திடம் இருந்து சிவகார்த்திகேயனுக்கு கால் வந்தது. நீங்க எடுத்துக்கிட்ட போட்டோவை இப்போ ரிலீஸ் செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டதாம். விசாரித்து பார்க்கும் போது அன்று தான் வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வந்தது.

அந்த நேரத்தில் தான் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படமும் வெளியானது. இப்படி தொடர்ந்து விஜய் வைரலாகும் போது அஜித் சேர்ந்த ஒரு தகவலும் சரியாக வைரலாகும். தற்போது பார்க்கும் போது தான் அது அஜித்தின் ஐடியா என்றும் புரோமோஷனை சத்தமே இல்லாமல் செய்து வந்து இருக்கிறார் என்பதும் தெரிய வந்து இருக்கிறது..

அப்போ இனி நிறைய அப்டேட் பார்க்கலாம்..!! ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்…

Related Articles

  • Be the first to comment

Back to top button