கிசு கிசு

தனுஷ்-அனிருத் இடையில் அதிகரித்த விரிசல்..! ஓ!! இதுதான் காரணமா..?

நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் நட்பில் மீண்டும் விரிசல் விழுந்துள்ளதாக தெரிகிறது.  ஒரு காலகட்டத்தில் தனுஷும், அனிருத் நகமும், சதையும்போல இருந்தார்கள்.. ஆனால் தற்போது இரண்டு நண்பர்களுக்கிடையே விரிசல் ஏற்பட்டுள்ளது

கோலிவுட் திரையுலகின் டாப் இசையமைப்பாளர்களுள் ஒருவராக இருப்பவர் அனிருத்.

இவர், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த ‘3’ படம் மூலம் திரையுலகிற்குள் எண்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில், தற்போது இவர் தன்னை அறிமுகம் செய்து வைத்தவர்களுடன் தொடர்பில் இல்லை என்று கூறப்படுகிறது.

2012ஆம் ஆண்டு வெளியாகி அன்றைய இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்த படம், 3. இந்த படத்தில், நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்திருப்பார்.

தனுஷிற்கு ஜோடியாக நடித்திருப்பார். படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இன்றளவும் இப்படத்தை பற்றி பெருமையுடன் பேசுவதற்கு காரணமாக இருப்பது, இந்த படத்தின் இசையாகும். அனிருத் இசையமைத்திருந்த முதல் படம், 3. இப்படத்தின் இடம் பெற்றிருந்த ‘Why This Kolaveri Di’ பாடல் உலகளவில் பெரிய ஹிட் அடித்தது. இணையதளம் பெரிதாக வெளியில் தெரியாத அந்த காலத்திலேயே இணையத்தில் வைரலான பாடல் இது. இப்பாடல் மட்டுமன்றி, படத்தின் பின்னணி இசை, பிற பாடல்கள் என அனைத்துமே ஹிட் அடித்தன.

அப்போது தம்பதிகளாக இருந்த ஐஸ்வரயா ரஜினிகாந்த்-தனுஷ், அனிருத்தை தொடர்ந்து தாங்கள் இயக்கும்/நடிக்கும்/தயாரிக்கும் படங்களில் இசையமைக்க வைத்தனர். தனுஷ்-அனிருத் கூட்டணியில், வேலையில்லா பட்டதாரி, மாரி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின. தன்னால் இசையமைமக்க முடியாத தனுஷ் படங்களில், அனிருத் பாடல்கள் பாடி வந்தார்.

தமிழ் சினிமாவில் நல்ல நட்புடன் பழகி வந்த ஐஸ்வர்யா-தனுஷ்-அனிருத்தின் உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ்-ஐஸ்வர்யா, கடந்த 2022ஆம் ஆண்டு தனித்தனியாக பிரிந்து வாழ்வதாக அறிவித்தனர். இவர்களின் உறவில் ஏற்பட்ட பிளவு, அனிருத்-தனுஷின் நட்பிலும் விழுந்ததாக கூறப்படுகிறது. தனது படங்களுக்கு இசையமைக்க அனிருத்தை முதல் ஆளாக பரிந்துரைக்கும் தனுஷ், அவரது சமீபத்திய படங்களில் அதை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. திருச்சிற்றம்பலம் படத்தை தாண்டி தனுஷும் அனிருத்தும் வேறு எந்த படங்களிலும் ஒன்றாக கமிட் ஆகவில்லை. தனது 50வது படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், அவரது 51வது படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக கூறப்படுகிறது.

ஒரு பக்கம் தனுஷ், பிற இசையமைப்பாளர்களை தேடிப்போக, இன்னொரு பக்கம் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா, தான் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை நாடினார். இதனால், தனுஷ்-ஐஸ்வர்யாவின் விவாகரத்தின் தாக்கம் இவர்கள் அனிருத்துடன் வைத்திருந்த நட்பிலும் ஏற்பட்டு விட்டதாக திரை வட்டாரங்களில் பேசிக்கொண்டுள்ளனர். இதனால், இவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் அவாய்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் அனிருத் கடந்த ஆண்டு வெளியான ‘ஜவான்’ படம் மூலம் பான் இந்தியா அளவில் ஹிட் அடித்த கலைஞராக மாறிவிட்டார். இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகளும் குவிய தொடங்கியது. கமல் ஹாசனின் இந்தியன் 2, ரஜினிகாந்தின் வேட்டையன் மற்றும் அவரது 171வது படம் ஆகியவற்றிற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். தெலுங்கிலும், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் தேவாரா பாகம் 1 படத்திற்கும் இசையமைக்கிறார். இடையில் தனது இசைக்கச்சேரி பயணத்தையும் துவங்க இருக்கிறார்..

Related Articles

  • Be the first to comment

Back to top button