தமிழ் சினிமா

அடேய்!! விட்டுருங்கப்பா!! விடாமல் துரத்தும் வில்லன் ரோல்…அல்லு அர்ஜுனுக்காக ஓகே சொன்ன விஜய் சேதுபதி..!!

தமிழ் சினிமாவில் உச்சத்தில் ஹீரோவாக இருந்த விஜய் சேதுபதி திடீரென வில்லன் ரோலை கையில் எடுத்தார். தற்போது அதில் கூட ஒரு டுவிஸ்ட் நடந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

விஜய் சேதுபதி தற்போது மஹாராஜா படத்தில் நடித்து வருகிறார். இது விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியுள்ள விஜய் சேதுபதிக்கு வில்லன் கேரக்டருக்கான வாய்ப்புகள் தான் அதிகம் வருகின்றன. இனி வில்லனாக நடிக்க மாட்டேன் எனக் கூறிவந்த விஜய் சேதுபதி, புஷ்பா 3ம் பாகத்தில் அல்லு அர்ஜுனுடன் மோதவிருக்கிறாராம்.

 கோலிவுட்டில் வெரைட்டியான நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக சினிமாவில் அறிமுகமான விஜய் சேதுபதி, தற்போது பான் இந்தியா அளவில் கலக்கி வருகிறார். அட்லீ இயக்கிய ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருந்தார். முன்னதாக ரஜினி, கமல், விஜய் ஆகியோரது படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, இனி வில்லனாக நடிக்கப் போவதில்லை எனக் கூறியிருந்தார். வில்லனாக எவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்தாலும் அது ஹீரோக்களின் இமேஜை டேமேஜ் செய்கிறது. அதனால் நான் நடித்த காட்சிகள் எடிட்டிங்கில் தூக்கப்படுகின்றன. எனவே இனி வில்லன் கேரக்டர்களில் நடிப்பதை தவிர்ப்பேன் என பேசியிருந்தார்.

இந்நிலையில், விஜய் சேதுபதிக்கு விடாமல் வில்லன் வாய்ப்புகள் துரத்தி வருகின்றன. அதில் ஒன்றாக புஷ்பா 3ம் பாகத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என விஜய் சேதுபதிக்கு ஆஃபர் சென்றுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் நடித்த புஷ்பா தி ரைஸ், 2021ம் ஆண்டு இறுதியில் வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா, பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி வரை வசூல் செய்தது.

இதனையடுத்து தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. புஷ்பா தி ரூல் என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில் இடையேயான மோதல் தான் ஹைலைட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் புஷ்பா 2 ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது க்ளைமாக்ஸ் சூட்டிங் ஜப்பானில் நடைபெற்று வருகிறதாம். இதன் தொடர்ச்சியாக 3ம் பாகத்தையும் எடுக்க அல்லு அர்ஜுன் – சுகுமார் கூட்டணி முடிவு செய்துள்ளதாம்.

அதில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்காக கோடிகளில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் புஷ்பா 3 ஷூட்டிங் 2026ல் தான் தொடங்கும் எனவும், அதற்கு முன்பாக அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் கமிட்டாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.இதில் மாஸ் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் விஜய் சேதுபதி.

Related Articles

  • Be the first to comment

Back to top button