தமிழ் சினிமா

அய்யோ!! அவரா!அதுக்கு செட் ஆக மாட்டார்… தனுஷை நம்பிய தயாரிப்பாளர்… முதல் சீனிலே வியந்துபோன டைரக்டர்..!!

சென்னை: இந்திய அளவில் ஃபேமஸான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்… கடைசியாக அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது.

அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது சேகர் கம்முல்லா இயக்கும் படத்தில் நடித்துவரும் அவர், தனது 50ஆவது படத்தை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். இந்த சூழலில் தனுஷின் கரியரில் மெகா ஹிட் படமாக அமைந்த தேவதையை கண்டேன் பட வாய்ப்பு அவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து தயாரிப்பாளர் காஜா மொய்தீன் தெரிவித்திருக்கிறார்.

கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. அதிலும் தனுஷின் உருவம் ரொம்பவே கிண்டல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியதன் காரணமாக நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார். காதல் கொண்டேன் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் இதுவரை 49 படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாகவும், தனுஷுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன.

தனுஷின் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜுடன் ஒரு படம், சேகர் கம்முல்லாவுடன் ஒரு படம், வடசென்னை 2 உள்ளிட்ட படங்களில் நடிக்கவிருக்கிறார். இதனால் அவர் படு பிஸியாக இருக்கிறார். முக்கியமாக முதல் படத்தில் பல கிண்டலுக்கு ஆளான தனுஷ்; தன்னை கிண்டல் செய்தவர்களையே பாராட்ட வைத்ததன் மூலம் உண்மையான வெற்றி என்றால் என்னவென்று காண்பித்திருக்கிறார்.

இதற்கிடையே நடிகராக மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என்ற பன்முகத்தன்மையை கொண்ட தனுஷ் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது. தற்போது அவர் தனது 50ஆவது படத்தை தானே இயக்கிவருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. விரைவில் படத்தின் அப்டேட்டுகள் வரும் என எதிர்பார்க்கலாம்.

 தனுஷின் இந்த உயரத்துக்கு காரணம் அவருடைய அர்ப்பணிப்பும், உழைப்பும்தான். அவரது கரியரில் மெகா ஹிட் படங்களில் ஒன்று கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான படம் தேவதையை கண்டேன். பூபதி பாண்டியன் இயக்கியிருந்த அந்தப் படம் தனுஷின் கரியரில் வெற்றி படமாகவே அமைந்திருந்தது. காதலர் கோர்ட்டில் கேஸ் போடுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் தேவதையை கண்டேன் படத்தின் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தேவதையை கண்டேன் படத்தின் கதையை நான் தனுஷிடம் சொல்லச்சொல்லி பூபதி பாண்டியனிடம் கூறினேன். அவரும் சென்று தனுஷிடம் அந்தப் படத்தின் கதையை சொன்னார். கதையை கேட்ட தனுஷும் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார். ஆனால் இயக்குநர் பூபதி பாண்டியனுக்கோ இந்தக் கதைக்கு தனுஷ் செட் ஆவாரா என்ற சந்தேகம் இருந்தது.

அவருக்கு அந்த சந்தேகம் இருந்ததன் காரணமாக தனுஷ் வேண்டாம் வேறு ஒரு நடிகரை வைத்து இப்படத்தை எடுக்கலாமே என்று அவர் சொன்னார். ஆனால் நானோ அவரிடம், தனுஷுக்கு வாக்கு கொடுத்துவிட்டேன். அவர்தான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறினேன். எனது முடிவை அவர் முழு மனதாக ஏற்றுக் கொள்ளவில்லை தான். அரை மனதோடு ஷூட்டிங்கை தொடங்கினார். ஆனால் தனுஷை வைத்து எடுத்த முதல் காட்சியை பார்த்தவுடன் தனுஷ் தான் இந்தக் கதைக்கு பொருந்துவார் என்று சொன்னார் இயக்குனர் . நான் தான் தவறுதலாக நினைத்து விட்டேன் என கூறினார். அதன் பிறகு படமும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது” என்றார்.. எல்லா தியேட்டர்களிலும் வசூலை அள்ளி குவித்தது. தனுஷ் மிகவும் ஃபேமஸ் ஆனார்..

Related Articles

  • Be the first to comment

Back to top button