கிசு கிசுபாலிவுட்

சர்ச்சையையும் தாண்டி வசூல் சாதனை படைத்த “தி கேரளா ஸ்டோரி” ஓடிடி-யில் வெளியாகிறது..!!!

இந்திய திரை உலகில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்த ’ தி கேரளா ஸ்டோரி   ஓடிடியில் வெளியாகிறது..

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்சென் இயக்கத்தில் கடந்த ஆண்டு மே 5-ஆம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது.

இந்தத் திரைப்படத்தில் கேரளத்தில் ஹிந்து பெண்கள் கட்டாயத்தின்பேரில் மதமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடு கடத்தப்படுவதாக கதை அமைக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்தில் இஸ்லாமிய சமூகத்தினரை கேவலமாக சித்தரித்து வெளியிடப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன.பின், நாடு முழுவதும் இப்படம் காவல்துறை பாதுகாப்பில் வெளியிட்டப்பட்டது.

தொடர்ந்து, இப்படம் உலகளவில் ரூ.200 கோடி வரை வசூலித்தது. இந்நிலையில், இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வருகிற பிப்.16 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளை தாண்டி இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது..

Related Articles

  • Be the first to comment

Back to top button