தமிழ் சினிமா

நடிகர் ராம்கியுடன் இருக்கும் குழந்தை நட்சத்திரம் யாருனு தெரியுதா..? அந்த பிரபல நடிகரா இவர்… ஆமாங்க!!!

சென்னை: நடிகர் ராம்கி நடித்த இது எங்கள் நீதி படத்தில் அவருடன் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் நடிகர் யாருனு கண்டுபிடிச்சிட்டீங்களா.. ஆமாங்க அவர் பிரபல நநடிகர் விஜய் புகைப்படம் தான் இப்போது செம வைரலாகி வருகிறது.

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் ராம்கி. இணைந்த கைகள், செந்தூர பூவே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அப்படி இவர் நடித்த திரைப்படம் தான் இது எங்கள் நீதி.

இப்படத்தில் ராம்கியுடன் இணைந்து ராதிகா சரத்குமார், நிழல்கள் ரவி, ராஜா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை பிரபல இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியிருந்தார். அவர் இயக்கியது மட்டுமின்றி அப்படத்தில் தனது மகன் விஜய்யை நடிக்க வைத்தார். ஆம், இது எங்கள் நீதி திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்திருந்தார்.

அப்போது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. ராம்கி அருகில் மாஸாக போஸ் கொடுத்து நிற்கும் அந்த சிறுவன் வேறு யாரும் இல்லை, நடிகர் விஜய் தான். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது…

Related Articles

  • Be the first to comment

Back to top button