தமிழ் சினிமா

ஓ!! நயனின்தாராவின் அண்ணன் இவரா..? வைரலாகும் போட்டோஸ்..!!

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு இன்றும் நடித்து கொண்டு இருப்பவர் நடிகை நயன்தாரா. எப்போதுமே நம்பர் 1 நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்தார். 75ஆவது படமாக அமைந்த அன்னபூரணி அவருக்கு தோல்வியையே கொடுத்தது.

அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மேலும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவும் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவரது அண்ணன் புகைப்படம் வெளியாகி சமூக வலைதலங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

அவர் சிம்புவை காதலித்தார். ஆனால் அவர்களது காதல் பாதியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து பிரபுதேவாவை காதலித்த அவருக்கு அந்தக் காதலும் கைகூடவில்லை. பிரபுதேவாவை காதலித்துக்கொண்டிருந்தபோதுதான் சினிமாவிலிருந்து ஒதுங்குவதாக கூறி கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவருக்கு ராஜா ராணி, நானும் ரௌடிதான், அறம் என தான் நடிப்பதற்கு ஸ்பேஸ் உள்ள படங்கள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் இரண்டாவது இன்னிங்ஸில் வேறு மாதிரியான நயன்தாராவாக கலக்க தொடங்கினார். அந்த சமயத்தில்தான் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் ரசிகர்கள் வழங்கினார்கள்.

நானும் ரௌடிதான் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினார்கள். முதலில் அரசல் புரசலாக அந்தச் செய்தி வெளிவர தொடங்கியது. மேலும் அதில் உண்மை இருக்காது என்றே பலரும் கருதினார்கள். ஆனால் விருதுகள் வழங்கும் விழா உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு விக்னேஷ் சிவனும், நயனும் ஒன்றாக கலந்துகொள்ள ஆரம்பித்ததை அடுத்து அவர்களது காதல் உறுதியானது.

 இதனையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு இரண்டு பேரும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு நயன் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தவகையில் அவர் ஜவான், இறைவன், அன்னபூரணி உள்ளிட்ட படங்களில் கடைசியாக நடித்திருந்தார். இவற்றில் ஜவான் படம் மட்டும் வட மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

 நயன்தாராவின் இயற்பெயர் டயானா. அவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரது தாய், தந்தை, உடன் பிறந்த சகோதரர் குறித்து பெரிதாக யாருக்கும் தெரியாது. அவரது தந்தை பெயர் குரியன் கொடியட்டு தாய் பெயர் ஓமன குரியன். சகோதரர் பெயர் லெனோ. இவர்களில் நயனின் தாய் மற்றும் தந்தை ஆகியோரின் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவனும்,நயனும் திருமணம் செய்துகொண்ட புதிதில் அந்தப் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.

ஆனால் நயன்தாராவின் அண்ணனான லெனோவின் புகைப்படம் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் அவரது புகைப்படம் தற்போது வெளியாகி சமுக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இரண்டு பேரையும் தோளோடு அணைத்தப்டி இருக்கிறார் லெனோ. அவர் துபாயில் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் மூலமாகவும் நயன் துபாயில் ஒரு தொழில் தொடங்கியிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

Related Articles

  • Be the first to comment

Back to top button