தமிழ் சினிமா

“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” தனுஷின் இயக்கத்தில் 3வது திரைப்படம் இதோ..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் பாடல் எழுதுவது, பாடுவது, தயாரிப்பு, இயக்கம் என பல அவதாரங்களை எடுத்து, அவற்றில் வெற்றியும் கண்டு வருகிறார். 

டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் மையமாக வைத்து இயக்க போகிறார் தனுஷ் .தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘பவர் பாண்டி’ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது.

அது மட்டுமன்றி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ‘பவர் பாண்டி’ திரைப்படம் பெரியளவில் கொண்டாடப்பட்டது.

தற்போது நடிகர் தனுஷ் அவருடைய ஐம்பதாவது திரைப்படத்தை அவரே எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். “ராயன்’ திரைப்படம் இந்த வருடத்தில் வெளியாகவுள்ள நிலையில், தனுஷ் தற்போது அவருடைய இயக்கத்தில் உருவாகும் மற்றுமொரு படத்தின் அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் அனிகா, சுரேந்திரன், பிரியா வாரியர், ரம்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பிப்ரவரி (14) காதலர் தின அன்று பட குழுவினர் இந்த படத்தின் போஸ்டரை பகிர்ந்து காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் தனுஷின் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படமாகும். இந்த படத்தை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வண்டர் பேர் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் மையமாக வைத்து படம் இருப்பதால் இளைஞர்களை அதிகளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது ..இத்திரைப்படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

  • Be the first to comment

Back to top button