கிசு கிசுதமிழ் சினிமா

இது என்ன அவர் வீட்டு பணமா..? ரஜினி , கமல் கூட அப்படி செய்யல… அஜித் செஞ்ச வேலைய பாருங்க..!!

நடிகர் அஜித்துக்கு நேரம் சரி இல்லையென்று தான் சொல்ல வேண்டும். அதுவும் விஜயகாந்த் இறப்பு அவரை ரொம்பவே பாதித்திருக்கிறது.

ஒட்டுமொத்த ரசிகர்களும் அஜித்தை திட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஒரு ஆகச்சிறந்த நடிகராக இருந்தவர் விஜயகாந்த்.

அனைவரின் அபிமானங்களையும் ஒருங்கே பெற்றவர். யாரை பற்றியும் குறை சொல்லாதவர். எல்லாருக்கும் நல்லதே நினைப்பவர். நல்லதே செய்தவர். இதனாலேயே தமிழகம் முழுவதும் விஜயகாந்துக்கு ரசிகர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்ட மனிதரின் இறப்பிற்குக் கூட வரவில்லையே அஜித் என அனைவரும் அஜித் மீது அதிர்ப்தியில் இருக்கின்றனர்.

ஒரு வேளை அவர் சூழ்நிலை அப்படியாக கூட இருக்கலாம். ஆனால் விஜயகாந்த் இறந்து இரண்டு நாள்களில் அவர் டான்ஸ் ஆடும் வீடியோ வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தது. அதிலிருந்தே அவர் மீது அனைவரும் வன்மத்தை கக்க தொடங்கினார்கள். சமீபத்தில் வெற்றித்துரைச்சாமியின் மறைவிற்கு வந்தும் கூட விஜயகாந்த் சமாதிக்கு போய் அஞ்சலி செலுத்தவில்லை அஜித்.

ஒட்டுமொத்த ரசிகர்களும் அஜித்தை புறக்கணிங்கள் என்றெல்லாம் கூறியிருக்கிறார். அவர் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் அவரை சுற்றி இருக்கும் ரசிகர்களால்தான் இன்னும் அவர் நடவடிக்கைகள் மோசமாகிக் கொண்டே போய்கின்றன. அதனால் அவரை புறக்கணிப்போம் என்றெல்லாம் கூறிவருகிறார்.

மேலும் ஒரு விஷயத்தை அந்தனன் கூறினார். தமிழ் சினிமாவிலேயே டப்பிங்கிற்குக் கூட கேரவன் வேண்டும் என கூறி வரவழைத்த ஒரே நடிகர் அஜித்தானாம். ரஜினி, கமல், விஜய், சிவகார்த்திகேயன் கூட டப்பிங் அறையில் ஏசி, மற்ற வசதிகளை பயன்படுத்திக் கொள்கிறார்களாம். ஆனால் அஜித் மட்டும்தான் டப்பிங்கிற்கு கேரவனை வரவழைத்திருக்கிறாராம்.

இது என்ன அவர் வீட்டு பணமா? தயாரிப்பாளர் பணம்தான் என்ற எண்ணம்தான் அஜித்தை இந்த மாதிரியெல்லாம் செய்ய வைக்கிறது என கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்..

Related Articles

  • Be the first to comment

Back to top button